என்னை அவளிடம் விட்டுவிட்டு தீண்டத்தகாதவனின் சகவாசம் போல அவர்கள் விலகிப்போய்விட்டனர்.
அவள் அருகே நான் படுத்துக்கிடக்கிறேன் என் இடது கையில் ஒரு திரவம் ஏறிக்கொண்டே இருக்கிறது...என் வலது கரம் அவள் மீது தொடமுயற்சிக்கிறது .....இயலவில்லை.
அவள் உறங்குகிறாள்...ஆள் அரவமற்ற அந்தக்காட்டுக்குள் அவள் மட்டும் தனியாக உறங்குகிறாள்.
அதைக்கல்லறை என்று சொல்லுகிறார்கள் இரக்கமற்றவர்கள்.
அது அவள் உறங்கும் தொட்டில்
அவள் காலின் கொலுசு சப்தமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது நதி.
அவள் தலைமாட்டில் ஒரு தென்னைமரம் தலையசைத்துக்கொண்டிருக்கிறது...அதன் வேர்கள் அவள் தேகத்தை தொட்டிருக்குமோ?
அவள் உறங்குகிறாள் என்னைச்சுமந்துகொண்டிருக்கும் அலுப்போடு
என் நண்பன் மகாலிங்கம் ஓடி வருகிறான்..அழுகையோடு...
"என்னடா மாப்ள..இப்படி ஆய்ட்ட?" ...அவன் கவலை அவனுக்கு
எந்த பதிலும் சொல்லமுடியாமல் கிடக்கிறது என் தேகம் அவள்நினைவுகளோடு.....
துடிக்கும் என் வலதுகரத்தைப்பார்க்கிறான் மகா..புரிந்துகொள்கிறான். என் கைகளைப்பிடித்து அவள் மீது வைக்கிறான் தொட்டிலில் கிடக்கும் அவள் தேகத்தின் மீது பரவுகிறது என் ஸ்பரிஷம். அவள் இருதயதுடிப்பின் உணர்தலில் என் உயிர் இன்னும்கொஞ்சம் வளர்கிறது.
ஆதிரை....என் தேவதையின் பெயர்.....
என் கண்களில் வடியும் கண்ணீர் என் கன்னங்களில் உருண்டோடுவதைக்கண்டு மகாவும் அழுகிறான்
"அழுகாதடா மாப்ள....ஆதிரைய தனியா பொதைச்சுட்டாய்ங்கடா வெயில்லையும் மழையிலையும்..அவள் நனைஞ்சுகிடந்தாள்...என்னைக்காவது ஒரு நாள் நீ வருவ...வந்து என் ஆதிரைய இப்படி போட்டுட்டாங்களே நு நீ அழக்கூடாது.......... அதுக்காகதான் மாப்ள நானே இந்தக்கல்லறைய கட்டுனேன்"
أنت تقرأ
ஆதிரை
عاطفيةஉயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல்...