எங்கள் அன்பின் சக்தி எனக்குத் தெரியும் அதனால்தான் தைரியம் அதிகமாக இருக்கிறது.
சித்தப்பா என் அருகில் வந்ததும் "இங்க எதுக்கு நிக்குற இந்த புள்ள எதுக்கு இங்க நிக்குது?" என்று கொஞ்சம் கோபமாக கேட்டார்.
'நான் காலேஜ்க்கு வந்தேன் இந்தப்புள்ள அவங்க தாத்தாவோட வந்துச்சு... அவர் அந்தக் கடைக்குப் போயிருக்காரு ' என்று சரளமான பொய்களோடு சமாளித்தேன்.....
"எதுல வந்த?" என்றார்
"மாகாவோட பைக்ல"
கோபமாக முறைத்துக் கொண்டே "சீக்கிரம் கிளம்பு" என்றார்.
அவர் சிரித்து நான் பார்த்ததேயில்லை.
ஆதிரை .. "ஏன் அத்தான்.இவர் இவ்லோ கோபமா பேசுராரு ?"
"அது பிறவிக்குணம் ஆதிரை"
வேறு எங்கும் சுற்றுவதற்கு மனம் இல்லை உடனே புறப்பட்டோம்.
ஆதிரை பின்புறம் அமர்ந்திருந்தாள்...
ஜென்மத் தொடர்புதான் என் ஆதிரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள்.
"நிறைய பிரச்சினை வருமோ?" அப்பாவியாக கேட்கிறாள் ஆதிரை.
'வரட்டும் ஆதிரை... வரட்டும் ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்திக்கிறான்... சேகுவாராவும் ஹோசிமன்னும் நாட்டுக்காக போராடுனாங்க... எத்தனையோ ஆண்கள் தங்களோட வீட்டுக்காக போராடுறாங்க நான் என் ஆதிரைக்காக போராடப் போறேன்' என்றேன்.
"வேண்டாம் அத்தான் போராட்டம் போராட்டம் நு சின்ன வயசுல இருந்து நிறைய பார்த்துட்டேன் நிம்மதியா வாழ ஒரு வழி பாருங்க அத்தான்"
அவளது ஏக்கம் அர்த்தமுள்ளது.
அவளது அழகான வலது கை, என் தோளின் மீது ஒரு குழந்தையைப் போலக் கிடந்தது.
யார் கண்ணிலும் பட்டுவிடாமல் ஒருவழியாக ஊர்வந்து சேர்ந்தோம்.
தாமதம் என்பது காதலில் தவிர்க்க முடியாதது, என்பதை அன்றுதான் முதன்முதலில் புரிந்து கொண்டேன்.
KAMU SEDANG MEMBACA
ஆதிரை
Romansaஉயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல்...