ஓடிய கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது.என்ன என்று கேட்டோம்.."ஏதோ சாதிச்சண்டையாம் வெட்டிக்கொண்டார்களாம்" என்றார்கள் மிகச்சலிப்போடு.........காரணம் இருக்கிறது.இந்த ஊர் அப்படிதான் சாதிதான் பெரியது என்பார்கள்.
சாதிக்காக எத்தனை உயிர் போனாலும் கவலைப்படாமல் சாதியை மட்டுமே வாழவைக்கிற சண்டாளப்பய ஊர்.
.நாங்கள் போகவில்லை திரும்பிவிட்டோம்.
சாத்தனார் அய்யா என் முகத்தைப்பார்த்தார்.
"நான் இதைத்தான் சொல்லவந்தேன் இந்த ஊர் நல்ல ஊர் ஆனா எதுக்கெடுத்தாலும் சாதி பாக்குறாங்க" என்றார்.
என்னால் எதுவும் பேச இயலவில்லை.பிறகு அவரே தொடர்ந்தார்...
"எங்க நாட்டுல ரெண்டு விசயம்தான் ஒன்னு தமிழனா?இல்லை சிங்களனா? எங்களுக்கு இந்த சாதியெல்லாம் தெரியாது..." பேசிக்கொண்டே என்மீது கை வைத்தார் அவர் வீடு வந்துவிட்டது..நாற்காலி இல்லை தரையில்தான் அமர்ந்தோம்..அய்யாவின் பேச்சு அறிவு மழையாக இருந்தது.
மகாலிங்கம்... பாவம் அவனுக்கும் இந்த பேச்சுக்கும் ரொம்ப தூரம்..ஆனால் அவன் எனக்காக இருப்பான்.இப்போதும் இருக்கிறான்.
"இவர் எதுமே பேச மாட்டாரா?" என்று மகாவை பார்த்து அய்யா கேட்டதும்
"உங்க பேத்தி எங்க?" எங்க என்றான்.
அவன் தொடையில் ஒரு கில்லு கில்லினேன்.அய்யாவோ மிகப்பொறுமையாக அவள் அரசு மருத்துவமனைக்கு போயிருப்பதாகக்கூறினார்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது...
காலைநேரம்
பசி இல்லவே இல்லை
வீட்டில் அம்மா தேடுவாள்...தேடட்டும் அதைவிட என்மனம் இவரிடம் எதையோ தேடுகிறது.
பணத்துக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்.
"நானும் என் பேத்தியும் கூலி வேலைக்குதான் போகிறோம்" என்றார்.
ESTÁS LEYENDO
ஆதிரை
Romanceஉயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல்...