காதல் பரிகாரம்

166 14 23
                                    

ஜோசியர் சுப்ரமணி அமர்ந்திருந்தார்.

நவகிரகங்களும் இவர் கையசைவில் இயங்குவதைப் போலத் தான் பேசுவார்.

இவரைக் கேட்டுவிட்டுத்தான் சிவபெருமானே கண்விழிப்பதைப் போல கர்வத்தோடு இருப்பார்.

இவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுவதுதான் எங்கள் வீட்டு விதி.

என்னைப் பார்த்ததும்

" வாடா தம்பி... இப்பத்தான் உன் ஜாதகத்தப் பார்த்தேன்" என்றார்.

அதற்குள் அம்மாவும் வந்துவிட்டாள்.

"நல்லா.... புத்தியில ஒரைக்குற மாதிரி சொல்லுங்க...." என்றாள்.

"தம்பி... உன் ராசிக்கு ஜென்மத்துல சனி இருக்குறதுனால ஒரு பெண்ணால அவமானம்  அசிங்கம் அவப்பேரு நாடுவிட்டு நாடு போறது கண்டம் விட்டு கண்டம் போறது தேசம் விட்டு தேசம் போறது மனநில பாதிச்சு  லூசா திரியுறது..... இதெல்லாம் நடக்கும்பா...." என்றார்.

அம்மா.... இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டே எங்கள் ஊரில் இருக்கிற எல்லா தெய்வங்களையும் கும்பிட்டாள்.

"இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா?" என்று அம்மா கேட்டதற்கு.

"இன்னைல இருந்து இருபத்தியயொரு நாள் தொடார்ந்து சிவன் கோவில்ல விளக்கு போடனும்.... மூனு மாசம் கழிச்சு வீட்ல ஒரு யாகம் வளர்க்கனும்" என்றார்.

ஆன்மிக விழிப்புணர்வு ஆழ்மனதைத் தொடும் வரை இதுபோன்றவர்கள் வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.

நான் எதுவும் பேசவில்லை.

அம்மா என் காதருகே வந்து... "நீ அடிக்கடி கேம்ப் ... பக்கம் போறத நிறுத்துப்பா... அந்த சிலோன்காரிய நெனச்சுக்கிட்டு அலையாத.... அப்புறம் ஜோசியர் சொன்னது நடக்கும்" என்றாள்.

அப்படியென்றால்... நான் ஆதிரையைத் தினமும் சந்திப்பது அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது..... பிறகு ஏன் அவள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. மனமெங்கும் ஆயிரம் கேள்விகள் முகாமிட்டன.

ஆதிரைDonde viven las historias. Descúbrelo ahora