தென்றல் 6

4.9K 293 166
                                    

திவ்யாவுக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை, எதற்காக ஷாக்சி இப்படி பயந்து ஓடுகிறாள் என்பது.ஏனென்றால் அவள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை கொண்டவள்.பிரச்சனையை கண்டு ஓடி ஒளிபவள் கிடையாது.அதற்காக பாரதி கண்ட புதுமைப்பெண்ணும் அல்ல.தைரியம் கொஞ்சம் அதிகமாக உள்ள சராசரி பெண்.

ஷாக்சியின் மனநிலையோ தனக்கு இப்படி ஒரு அநீதி நடந்தது அவள் வேலை செய்யும் கம்பனியில் ஒருத்தருக்கு அல்லது சிலருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.அப்படி இருக்க பார்க்கும் ஆண்களை எல்லாம் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும்.எவனோ ஒருத்தன் செய்த ஒரு நாசகார செயலுக்காக எதற்கு எல்லோரையும் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும் என நினைத்து அவள் இந்த ஊரை விட்டே செல்ல நினைத்தாள்.அதைவிட இனி அவளுக்கு IT இல் வேலை செய்ய விருப்பமில்லை.பொதுவாக எல்லா IT கம்பனிகளிலும் இதே நிலமைதான் என்பது அவளது நிலைப்பாடு.அவளது நிலைப்பாடு இது  ,ஆனால் அது தவறாக கூட இருக்கலாம்.

---------

சென்னை வந்து இறங்கியவள் திவ்யா கொடுத்தனுப்பிய வேர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்லுக்கு அட்றசுக்கு சென்றவள் அங்கு தனது பேக் எல்லாவற்றையும் வைத்து ப்ரெஷ் ஆகி வந்தாள்.ஷாக்சி யாருடனும் தனது அறையை செயார் செய்து கொள்ள பிடிக்காமல் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தாள்.

இரண்டு நாட்களின் திவ்யா கூறிய அவளுடைய ப்ரெண்டின் அப்பாவுடைய கம்பனிக்கு சென்றவள் MD ஐ சந்திப்பதற்காக ரிசப்சனில் காத்துக்கொண்டிருந்த வேலை ரிசப்சனில் இருந்த பெண்

"மேம் உங்கள சார் கூப்பிர்ராரு"என்றாள். MD யின் அறையை அடைந்த ஷாக்சி கதவை தட்டி

"மேய் ஐ கம் இன் சார்"என்று கேட்க உள்ளிருந்து ஒரு கம்பீரமான குரல்

"யெஸ் கம் இன்"என்றது.கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற ஷாக்சிக்கு ஒரே அதிர்ச்சி.அங்கு உள்ளே இருந்த நபர்

"நீதான் திவ்யா பொண்ணோட ப்ரெண்டா.ஹஹா..சூப்பர்"என்று கூற அவர் நக்கலாக கூறுகிறாரா இல்லை பாராட்டி கூறுகிறாரா என்பதை அறிய முடியாமல் தினறிக்கொண்டிருக்க அவரோ

நகம் கொண்ட தென்றல்Where stories live. Discover now