அன்றைக்கு மணி 10 ஐ கடந்திருக்கும் இன்னும் என் மனைவி வீடு வந்து சேரவில்லை என்ன தான் அவள் என்னிடம் அவள் வர தாமதமாகும் என கூறியிருந்தாலும் சற்று கலவரமாகவே அமர்ந்திருந்தேன்....(எப்போமே 6-7 குள்ள வீட்டுக்கு வந்துருவா...
இன்னிக்கு தா இவ்ளோ லேட்)மணி 11 ஐ தொட்டது...
அவள் போனிற்கு அழைத்தேன்.... ரிங் போனது கடைசி ரிங்கில் அவள் குரல் கேட்டது........."ஹலோ"...
"சக்கர எங்க டா இருக்க....
முடுஞ்சதா நா வரவா உன்ன கூப்ட".... பதட்டமான குரல் அவனிடத்தில்."ஹலோ என்னங்க...
மீட்டிங் இன்னும் முடில முடிஞ்சதும் நானே கூப்ட்றேன்" ...
(ஹஸ்கி வாய்சில் பதில் தந்தாள்........)
நான் பதில் சொல்லும் முன் போன் கட்டானது....(புருசங்கார வீட்டுல தனியா இருப்பானே சீக்கிரமா கெலம்புவோம்னு அறிவிருக்கா...சரியான மக்கு மல்கோவா ....)டீவி பார்த்தேன்.... போர் அடிச்சது..
எனக்கு பசிக்கும் என்று தெரிந்து அவள் சமைத்து வைத்திருந்த அந்த சாதம் அமிர்தமாய் தெரிந்தது..........ஆனால் அவள் இல்லாமல் அமிர்தம் கூட பாரமாய் தெரிந்தது என் தொண்டைக்கு.....இன்னும் சிறிது நேரம் தான் 12 மணிக்கு... (இன்னும் கானோம்...
இனி வேலைக்கு போற பல்லாங்குழி ஆட்றனு கேப்பால்ல அப்போ இருக்கு.... )அப்போது எங்கள் அறையில் அந்த பாடல்....
( நெஞ்சாத்தியே...
பொஞ்சாத்தியே.....
நீ தானடி...... என் வாழ்க்கையே... ஒ... ஓஒஒ.... நீ என்பதே நான் என்கிற நீயே..... )என்னை மறந்து அந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன்...
அப்போது தான் பார்த்தேன் அவளிடமிருந்து தான் அந்த அழைப்பு...
ஒரு நிமிடம் போனை காதில் வைத்து பேசும் முன் ஒரு மென்மையான கரங்கள் என் வயிற்றை சுற்றி வளைத்தது...
அவள் மூச்சுக்காற்றை என்னால் உணர முடிந்தது....
அவள் உயரம் எட்டவில்லை என்றாலும் என் காதிற்கு அருகில் கேட்டது அவள் மென்மையான குரல்....
YOU ARE READING
😘சக்கர 😘 (முடிவுற்றது)
Non-Fictionகணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...