கார்த்தி எழும் ஒவ்வொரு காலை பொழுதும் புத்துணர்ச்சியுடன் தன் மனையாளின் அந்த இனிய முத்தத்திலில் துவங்கி இரவு அவளின் அணைப்பு வரையில் மகிழ்ச்சி திழைத்து பழகிவிட்டு
இன்று அவள் இல்லாத அந்த கொடுமையான நாட்கள் அவனை ஒவ்வொரு நொடியும் கொன்றுக்கொண்டிருந்தது ......தேவாவின் பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் நிறைந்த அவன் உலகம் இன்று வெறுமையை அடைந்ததை போல் உணர்ந்தான் .........
அவளுடன் பேசிய கதைகள் இனித்தது ....
அவளுடன் பழகிய அந்த நாட்கள் இனித்தது ....
அவளுடன் சேர்த்து சிரித்தேன் இனித்தது ....
அவளுடன் என் துன்பத்தை பகிர்ந்துக்கொண்டேன் இனித்தது .....
அவளுடன் கொண்டாடிய என் பிறந்தநாளும் இனித்தது .....
அவளுடன் சேர்த்து சுற்றிய பயணங்கள் இனித்தது ....
அவளுடன் சேர்ந்த நாளில் இருந்து என் வாழ்க்கை முழுவதும் இனிப்பாய் இனித்தது ....இத்தனை இன்பங்களையும் இனிப்பாய் வழங்கியவள் இன்று உன் நினைவுகளை மட்டும் என்னிடம் விட்டு எங்கே சென்றாயடி .....
நான் சிரிக்க மறந்து பல நாள் ஆகிறது ....
உன்னை தேடாத இடம் இல்லை ...பைத்தியம் பிடிக்கிறது...
என்னை ஏன் விட்டு சென்றாய் தேவா....ஒரு முறை அந்த இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டான் .....
அவன் விழுந்த நேரம் அங்கு யாருமே இல்லை .....
தவினும் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அன்று இரவு கார்த்தியுன் நிலைமை மிகவும் மோசமானதுதான் மிச்சம் ......அவன் விழுந்த வேகத்தில் கல்லில் கால் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது .....
பட்ட இடத்திலே படுவதை போல் அன்றும் தலையில் போடப்பட்ட தையலிலே மேலும் அடி பட்டு ரத்தம் வழித்துக்கொண்டிருந்தது .......
இரவு முழுவதும் யாருமே கவனிக்கவில்லை .....அவன் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ தேவாவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவன் எண்ணமே அவன் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது ....
CZYTASZ
😘சக்கர 😘 (முடிவுற்றது)
Literatura Faktuகணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...