சிரானும் அகல்யாவும் நாட்டரசன் கோட்டை காவல் நிலையம் வந்தடைந்தனர்.
இருவரும் காரில் இருந்து இறங்கி நடந்து செல்கின்றனர். வெளியே கான்ஸ்டபிள் சுந்தரம் சிரான் A.C ஐ வரவேற்க நிற்கிறார்.
அகல்யா நடந்து வரும்போது அவள் பின்னே யாரோ குதிரையில் வருவது போன்று குதிரையின் சப்தம்.
அவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்கிறாள்.
பார்க்கும் போது மரங்கள் மட்டுமே தெரிகிறது.
சிரான் என்ன என்று கேட்க அவள் ஏதும் கூறவில்லை.சுந்தரம் : வணக்கம் சார். நாட்டரசன் கோட்டை வரவேற்கிறது. ரொம்ப சந்தோசம் சார். நீங்க வந்தது. உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டுஇருக்கேன் சார்.
சிரான் : நன்றி சுந்தரம். சரி என்ன இங்க வீடு எதுமே இல்லை, நம்ம ஸ்டேஷன் மட்டும் இருக்கு. எல்லாரும் எங்க போய்ட்டாங்க.
சுந்தரம் : சார் ஊரு மக்கள் எல்லாரும், இன்னும் 2 km தள்ளி இருக்க சடையன் மலை அடிவாரத்துல தங்கி இருகாங்க சார். ரொம்ப நாளாவே இங்க யாரும் இல்லை சார். சரி சார் வாங்க நம்ம வீட்டுக்கு போலாம் பேசிட்டே மறந்துட்டேன்.
சிரானுடன் கான்ஸ்டபிள் சுந்தரம் அவர்கள் தாங்க இருக்கும் வீட்டிற்கு செல்கின்றனர் .
சிரான் : அப்புறம் சுந்தரம் என்ன ஸ்டேஷன் la SI இன்ஸ்பெக்டர் யாருமே இல்லை. வரலையா அவங்க.??
சுந்தரம் : அது ஒன்னும் இல்லை சார் சொல்றேன் அப்புறமா..
சிரான் : ஏன் சுந்தரம் வீடாவது ஊருக்குள்ள இருக்க??
சுந்தரம் : சார் என்ன இப்டி கேட்டுட்டீங்க.... வீடு நம்ம மக்கள் இருக்க இடத்துல அருமையான இடம் சார்.
அகல்யா : சுந்தரம் சார், வீடு எப்படி இந்த village ல??
சுந்தரம் : மேடம் வீடு லாம் அருமையா கட்டி இருப்பாங்க மேடம். இங்க இருக்க குளிர்க்கு எதுவா மரவீடு எல்லாமே. உங்களுக்கு பிடிக்கும் மேடம் கண்டிப்பா...
சிரானுக்கு ஆல் மனதில் குழப்பங்கள் இந்த கிராமத்தை பற்றி.. அவன் கண்களில் இங்கு இருக்கும் மர்மம் தெரிகிறது. சுந்தரமிடம் அதிகம் கேட்க விரும்பவில்லை அகல்யா இருப்பதால். ஏன் என்றால் அவள் ஏற்கனவே சற்று பயந்து உள்ளாள்..
YOU ARE READING
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...