சிரானும் சுந்தரமும் கிளம்பினார்.
சிரானின் ஜீப் இல்.சிரான் : ஏன் சுந்தரம் உங்களுக்கு விருப்பம் இல்லையா என்னோட மலைக்கு வர...
சுந்தரம் : சார் எங்களுக்காக நீங்க இவ்ளோ ரிஸ்க் எடுக்கும்போது. நான் இதுகூட பண்ணலைனா எப்படி சார். ஆனால் உங்க தயிரியம் இதுவரை இங்க யாருக்கும் வந்தது இல்ல சார்.
இவர்கள் சடையன் மலை நுழைவாயில் இல் நுழைந்தனர்.
மலை அடிவார காட்டுக்குள் அமைதியான நிலை. இலைகள் உதிர்ந்து விழும் சப்தங்களே கேட்கின்றது.சுந்தரம் : ஏன் சார் நீங்க திடீர்னு சடையன் மலை போகணும் னு சொன்னிங்க??
சிரான் : சுந்தரம், இதுவரை நடந்த எதுவும் நமக்கு தெளிவா சொல்லல. அங்க போன பாரிவேந்தனுக்கு என்ன நடந்தது, அங்க என்னதான் இருக்கு. இதுக்கெல்லாம் விடை அந்த மலைல தன் இருக்கு.
இவர்கள் செல்ல செல்ல இருள் சூழ ஆரம்பித்தது. ஆனால் சிரானின் கடிகாரம் மணி 3:00 என காட்டுகிறது. முன்னே செல்லக்கூடிய பாதை, ஜீப் செல்ல ஏதுவாக இல்லை.
சுந்தரத்திற்கு பயம் ஏற்பட தொடங்கியது.
சுந்தரம் பயத்தில் பதற்றமாக பேசினார்.
சிரான் சுந்தரத்தின் பயம் அறிந்தான்.சிரான் சுந்தரத்தின் பயத்திற்காக ஆறுதல் சொல்ல துடங்கினார்.
சுந்தரம், நீங்க பயப்படாம இருங்க கொஞ்சம். இத ஏன் சொல்றேன்னா, கொள்ள வந்த அரக்கனுக்கு மனிதன் உடல் தேவை இல்லை. அவன் கொலை பண்ணினது எல்லாமே ஏதோ காரணம் தன். அந்த அரக்கனுக்கு 3 தடவ என்ன கொள்ள வாய்ப்பு கிடைத்தும் என்ன கொள்ளல. அதனால நீங்க தைரியமா இருங்க சுந்தரம்.சுந்தரம் : சார் இன்னும் எவ்ளோ தூரம் சார்.
சிரான் : இப்போ இருக்க இருட்டுக்கு நாம இன்னும் மேல வேற போகணும். சீக்ரம் வாங்க...
இருவரும் சென்றுகொண்டிஇருக்கும்போது பலத்தை காற்று வீச தொடங்கியது. சிரானுக்கும் மனதில் அச்சம், எங்கு அந்த அரக்கன் வந்து விடுவானோ என்று.
மிக தூரம் மலை ஏறியதும், மேலே ஒரு குகை போன்று தெரிந்தது.
YOU ARE READING
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...