அனைவரும் பயத்தில் நுழைவாயிலை பார்த்துக்கொண்டே இருந்தனர். குதிரை வேகமாக வரும் சப்தம் அதிகமாக கேட்டது.
நுழைவாயில் அருகே நிற்கும் பரசுராம் மனைவியை அனைவரும் ஓடி வந்து விடு என்று அழைத்தனர். பரசுராம் மனைவி திரும்பி ஓடிவர நினைக்கும் தருவாயில்,
இதுவரை ஒரு புதிராக அனைவரும் பயந்த அந்த கொடூரன் வந்து நின்றான் வியக்கும்படி. மனிதன் உடலாகவும் தெரியவில்லை, குதிரை முழுமையான உடலுடனும் இல்லை. அரக்கன் போல இருந்தான்.
மக்கள் பயந்து வீட்டுக்குள்ள ஓடினர்.
பரசுரமும் சிரானும் அகல்யாவும் மட்டும் நின்றனர். குதிரை பரசுராம் மனைவியை உதைத்து கீழே தள்ளியது.பரசுராம் மனைவி கீழே விழுந்தார். அகல்யா அக்கா என்று கத்தி அவரைக்காப்பற்ற அருகில் ஓட.
சிரானும் அகல்யாவை பார்த்து ஓடினான்.
அரக்கன் வாளை எடுத்தான் அகல்யாவை உற்று நோக்கினான்,வாளை பரசுராம் மனைவி கழுத்தில் வைத்தான், பின் அகல்யாவை வெட்ட வாளை ஓங்கினான். அவன் முகம் தெளிவாக இல்லை, மக்கி மீதம் மிஞ்சிய உடலாகவே இருந்தான்.திடிரென்று அகல்யாவை வெட்டாமல் விட்டுவிட்டு பரசுராம் மனைவியை குதிரைமேல் ஏற்றி ஓடிவிட்டான். சிரான் தன் காரை எடுத்து அவனை பின் தொடர்ந்து செல்கிறான்.
சிரான் பின் தொடர்வதை கண்ட அரக்கன் பின்னே திரும்பி திரும்பி பார்க்கிறான். சிரான் வேகமாக செல்ல செல்ல திடீரென இருளில் அரக்கன் மறைந்தான்.சிரான் பதற்றமாக காரை நிறுத்தி யோசிக்கிறேன்.
அங்கு ஏதோ பார்க்கிறான். கடும் கோவம் எழுந்தது சிரானுக்கு.
காரை திருப்பி சாமி இன் வீட்டுக்கு செல்கிறான்.
சாமி வீட்டிற்கு வந்ததும் ஏன் சாமி பாரிவேந்தன் தான் காரணம் னு தெரிஞ்சும் நீங்க ஏதும் பணாம விட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன அப்படி ஆசை வெறி இந்த மக்கள் மேல...
உங்க யாகம் நடந்தும் எப்படி அவனால உள்ள வர முடிஞ்சது சொல்லுங்க.சாமி : சிரான் புரியாமல் ஏதும் பேசாதே. காரணம் வேற என்னமோ... புரிஞ்சுக்கோ...
YOU ARE READING
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...