சிரான் வெங்கடாசல சாமி சொல்லியத்தையே நினைத்து கொண்டு தூங்காமல் அமர்ந்து இருந்தான்.
அகல்யா சிரானிடம் கேட்க, என்ன சிரான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நாம போய்டலாமா இங்க இருந்து.
நம்ம வீட்டுக்கே..சிரான் : அது முடியாது அகல் இங்க நடக்குறது பத்தி நாம இன்னும் முழுசா புரிஞ்சுக்கல . நீ நினைச்சது இவங்களும் நினைச்சு இருப்பாங்க ல. அவங்க ஏன் இன்னும் இங்க இருந்து போகல தெரியுமா.. இது ஒரு சபிக்கப்பட்ட இடம் அகல் . இங்க இருந்து நாம வெளில போக முடியாது. இங்க வந்தால் சாபம் எப்போ தீருதோ அப்போதான் போக முடியும் அகல். நீ நல்ல தூங்கு எமேல நம்பிக்கை வெச்சு. கண்டிப்பா இங்க இருக்க எல்லார்க்கும் இந்த சபிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து நான் ஒரு விடை தருவேன்.
பரசுராம் ஐயா தன் வீட்டில் தனிமையில், தன் மனைவியை இழந்த வருத்தத்தில் உள்ளார்.
ஊர் மக்கள் க்கு இருந்த நம்பிக்கை சந்தோசம் மறந்தது. அரக்கன் மத்தியில் தான் தங்கள் வாழ்க்கை என நம்பிக்கையை கை விட்டனர்.அடுத்த நாள் காலை சிரான் யாரையும் சந்திக்காமல் ஸ்டேஷன் சென்றான். ஸ்டேஷன் இல் சுந்தரம், மற்ற கான்ஸ்டபிள்ஸ் இருந்தனர்.
அதிக நேரம் ஸ்டேஷன் இல் இருக்க பிடிக்காமல் கிளம்பிவிட்டான் சிரான்.
சிரான் நேற்று இரவு பார்த்தது அவனுக்கு பல குழப்பங்களை தந்தது .சீரான் யோசித்துக்கொண்டே காரை பாரிவேந்தன் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு சென்றான். சிரான் தன்னுடன் யாரையும் அழைத்து செல்லவில்லை. தான் மட்டும் தனியாகவே சென்றான்.
பின் சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேண்டும் என்று வீட்டுக்குள் செல்கிறான். மர வீடு என்பதால் வீடு மிகவும் பழுதடைந்து இருந்தது.
உள்ளே வெளிச்சம் ஏதும் இல்லை.
சிரான் தான் torch வெளிச்சம் மூலம் உள்ளே உள்ளதை பார்த்தான்.
வீட்டுக்குள் பாரிவேந்தனின் வரைபடங்கள் இருந்தன. வீட்டில் பெரிதும் ஏதும் தென்படவில்லை.
சிரான் வீட்டில் இருந்த 3 அறைகளையும் சுற்றி பார்த்தான்.
ஏதும் கிடைக்கவில்லை என்று வீடு வெளியே வர நடந்தான்.
அப்போது அவன் நடக்கின்ற சப்தம் சற்று வித்யாசமாக கேட்டது.
மீண்டும் அதே இடத்தில் நடக்க கீழே ஒரு வெற்றிடம் இருப்பது போல் சப்தம் கேட்கிறது .
சிரான் அந்த மர பலகையை நகர்த்தினான். கீழே ஒரு அறை இருப்பது தெரிந்தது . படி வழியாக கீழே செல்கிறான். படிக்கட்டுகள் மிக வலிமையற்று இருந்தது.
கீழே சென்றான். கீழே அறை காலியாக இருந்தது.
பின் அறையின் மறுபுறம் பார்த்தான். அங்கு ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.
சிரானுக்கு அதை தொடவேண்டாம் என்ற எண்ணம், அதை திறந்து பார் என்ற எண்ணமும் தோன்றியது. தான் இதை திறக்கவே முடிவெடுத்தான்.
சிரான் அந்த பெட்டியை திறந்து பார்த்தான்.
அவன் கண்கள் அதை நம்பவே மறுத்தது. ஆச்சர்யத்துடன் மூடிவிட்டு திரும்பினான்.
DU LIEST GERADE
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...