அனைவரும் உறங்கி விட்டனர். காலை விடிந்தது.
சிரான் அகல்யா தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.அகல்யா : என்ன சிரான் இங்க எல்லாரும் ரொம்பவே வித்யாசமா நடந்துக்கிறாங்க...
சிரான் : ரொம்ப பழைய village லூசு. அப்டித்தான் இருப்பாங்க, நீ ஏதும் யோசிக்காம சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு.. நான் ஸ்டேஷன் கெளம்பனும்.
சிறிது நேரம் பிறகு சுந்தரம் ஜீப் இல் வந்தார் சிரானை அழைத்து செல்ல.
சிரானும் சுந்தரமும் ஸ்டேஷன் க்கு கிளம்பிவிட்டனர்.சுந்தரம் : ஏன் சார் சாமி ஐ பாக்க போகலையா??
சிரான் : சாமி அ பாக்கலாம் அப்புறம். வந்தாச்சு ஸ்டேஷன் போகாம இருந்த எப்டியா... அதான்..
இருவரும் ஸ்டேஷன் சென்றனர்..
சுந்தரம் ஸ்டேஷன் இல் 4 கான்ஸ்டபிள்ஸ் ஐ அறிமுகம் செய்கிறார். பின் அவர்களுடன் நெருக்கமாக பேசுகிறார் சிரான்.
ஊரை பற்றி தெரிந்து கொள்ள சிரானுக்கு ஆர்வம்.சிரான் : சரி சுந்தரம், கான்ஸ்டபிள் ஸ் அ பாத்துக்க சொல்லுங்க. நீங்க வாங்க நாம நம்ம கண்ட்ரோலிங் ஏரியா வ பாத்துட்டு வரலாம்.
சுந்தரம் : சரி சார்.
சிரானும் சுந்தரமும் ஸ்டேஷன் இல் இருந்து தங்கள் பொறுப்பில் உள்ள ஏரியா வை சுற்றி பார்க்க கிளம்பினார்.
சிரான் : ஏன் சுந்தரம், நம்ம சடையன் மலை கிராமம் எல்லை பத்தி சொல்லுங்க.??
சுந்தரம் : அது ஒன்னும் இல்லை சார். 3 பக்கம் காடு, அதுல ஒரு பக்கம் சத்தியமங்கலம் போற ரோடு சார். 4 வது பக்கம் சடையன் மலை சார்.
சிரான் ஜீப் ஐ ஓட்டிக்கொண்டே செல்ல. காடுகள் பாதை சரி இல்லை.
சுந்தரம் : சார் இதெல்லாம் ஊர் காரங்களே ரெடி பண்ணின பாதை சார். ஏதும் மிருகம் வரக்கூடாதுன்னு. இதுல மனிதர்கள் போறதே கஷ்டம்தான்.
பின் சிரான் காரை பாதை மாற்றி மலையை நோக்கி சென்றார்.
அங்கு ஒரு விட்டம்(arch) இருந்தது.
YOU ARE READING
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...