எங்கே எனது கவிதை

2.9K 81 4
                                    

Episode 32

💕"எங்கே எனது கவிதை"❣

நிஷா சென்ற பின் அஷ்வின் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.. நிஷாவின் கதையை கேட்டதில் இருந்து அவளின் மேல் கொண்டிருந்த காதல் இன்னும் கூடியது.. அவளை தன் காதலால் அரவணைக்க தோன்றியது.. அவள் கண்கலங்கிய போது அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது... இருந்தாலும் அவனால் அதை செய்ய முடியவில்லை..

அஷ்வின் தன் இதயத்தில் கையை வைத்துக் கொண்டு இரு கண்களையும் மூடிக்கொண்டான்.. அர்ஜூனின் மேல் ஒரு மதிப்பு உண்டாகியது.. அவனது காதலை பார்த்து பொறாமையாக உணர்ந்தான்..
அர்ஜூன் முதல் முதலாக தன் காதலை சொல்லும் போது கூறிய வார்த்தைகளை மீட்டினான்..

*அர்ஜூன்*:-"எப்ப நா உன்ன முதல் முறையா பார்த்தேனோ அப்பவே என் இதயத்த உன் கிட்ட தொலச்சிட்டேன்..💝 என்னோட இதயம் நிக்கும் வரை உன் கூட வாழ ஆசைபட்ரேன்"

அஷ்வினுக்கு அர்ஜூனின் ஆசையை நிறைவெற்ற தோன்றியது.. அவனது இதயம் இன்னும் நிக்கவில்லை.. அது நிஷாவின் அருகாமைக்காக ஏங்கியது..

அஷ்வினுக்கு நிச்சயமாக தெரியும் நிஷா தன் காதலை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று.. அந்த அளவிற்கு அர்ஜூன் அவளது மனதில் குடியிருந்தான்.. அவள் வெளியிலே சிரித்தாலும் உள்ளுக்குள் தவிக்கும் அவச்தையை அஷ்வின் அறிந்து கொண்டான்..

அவளை இன்நிலையில் இருந்து மீற்கவும்.. அவளை தன் காதலில் சிறை செய்யவும்.. அர்ஜூனின் ஞாபகம் வராமல் இருப்பதற்கும்.. அஷ்வின் ஒரு திட்டத்தை தீட்டினான்...
நிஷாவை அவளது வழியிலே சென்று மாற்ற நினைத்தான்.. அவளது பலவீனமே அர்ஜூன் தான்.. அவனுக்காக அவள் எது வேண்டுமானாலும் செய்வால்... அதை கொண்டே அவளை தன் திட்டத்துக்குள் கொண்டுவர எண்ணிணான்.. தன் காதலை அவளிடம் கூற முன்.. அவள் அர்ஜூன் மேல் கொண்ட காதலை மறக்க வேண்டும்.. எனவே தன் திட்டம் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அடுத்த நாளே அதற்குரிய ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தான்...

எங்கே எனது கவிதைDonde viven las historias. Descúbrelo ahora