"வாடா தம்பி சீக்கிரம் வா..காகத்துக்கு சாப்பாடு வெச்சு பத்து நிமிஷம் ஆச்சு... என்ன கோபமோ இன்னும் சாதம் எடுக்க வரல...காக்காய்க்கு சமமா கத்தறதுக்கு யார கூப்புடலாம்னு நெனச்சிகிட்டிருந்தேன், நீயே வந்துட்ட தம்பி.ஒரு தடவ என்ன அப்பத்தான்னு கத்துன மாரியே கூவு ராசா"
"அப்பத்தா என்ன புருஷனும் பொஞ்சாதியும் ஜோடியா சேந்து வாருரிங்களா?நான்தான் மொதல்ல உங்க ரெண்டு பேரையும் தாத்தா அப்பதான்னு கூப்பிட்டது. என்ன தான் நீங்க செல்லம் கொஞ்சனும். இப்டி மனச நோகடிக்கக்கூடாது."
"யாரு மனச யாரு நோகடிச்சா?" கை கால்கள் அலம்பிக்கொண்டு பார்த்திபன் வீட்டினுள் நுழைந்துவிட்டதை அவரின் இக்கேள்வி பறைசாற்றியது.
"அப்பா நீங்க பெத்ததும் உங்களை பெத்தவங்களும் காலைலேர்ந்து ஒரே ஆட்டம் பா..என்னால ஜாகிங் கூட வர முடில இவங்களால"
"ஏழு மணி வரைக்கும் மூஞ்சியை மூடிட்டு தூங்கிட்டு எதுக்குடா சம்மந்தமே இல்லாம மை டியர் பேரன்ட்ஸ் அண்ட் மை டியர் பேபி டால் மேல பழி போடற?ஜாகிங் தான் போல,போய் எக்சர்சைஸ் ரூம் ல வெய்ட் தூக்கு நா இப்போ வந்து மானிட்டர் பன்றேன்." செல்ல மகனின் வாத விவாதங்களை காதில் வாங்காமல் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தார் இன்றைய தொழிலுலக சக்கரவர்த்தி.
"ஹே மசில்ஸ் பாய், அப்பா உன்ன வெய்ட் தூக்க சொன்னாரு காது கேக்கலையா?போய் பாடிய பில்ட் பண்ணுங்க சகோ"-ஸ்ருதி
"ஏய் டாகி, அப்பா கு என் ஹெல்த் மேல எவ்ளோ அக்கறை பாத்தியா?உன்னை அவரு கண்டுக்கவே இல்லயே ஹிஹிஹி" ஏளன சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வாயைத்திறந்தார் ரோஹிணி.
"அவ காலைல அஞ்சு மணிக்கே எந்திரிச்சு அப்பாக்கூட யோகா பண்ணா கண்ணா.. ஆமா அவள என்னனு கூப்பிட்ட டாகி யா?கரண்டி அடுப்புல தாண்டா இருக்கு"
"அய்யோ மம்மி,அவ டாக்டர் ஆக போறால,அதான் அவள டாகி னு கூப்பிட்டேன்.நீ கூட தான் ஒரு பிசினஸ் வுமன். உன்ன பிக்கி னு கூப்பிடவா?"