"ஹே சமி...வந்திட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லியனுப்ப மாட்டியா?ஹாஸ்பிடல் ஸ்மெல் ஆள தூக்குறதுலேருந்து தான் உன்னோட அரைவலே தெரிது",என்று கூறிக்கொண்டே கட்டிலில் அமர்ந்த சித்துவின் மேல் ஒரு கரடி பொம்மை பறந்து வந்தது.
"சித்து,ஸ்ருதி ய கிண்டல் பண்ணாதே டா..அவ தா அப்பாவ என்னென்னமோ சொல்லி மேரேஜ் கு கன்வின்ஸ் பண்ணா...நீயும் இருக்கியே...அப்பா கிட்ட பேச சொன்னா,மீட்டிங் இருக்கு காண்பரன்ஸ் இருக்குனு தலைமறைவாகிட்ரது"-லக்ஷிதா
"ஓய் கல்யாணபொண்ணே, லவ் பண்றது,கல்யாணம் பண்றது எல்லாம் நீங்களாம்...ஆனா நடுல அடி,உதை,திட்டு வாங்கிறது மட்டும் நானா...அட போம்மா...இந்த லவுக்கு ஹெல்ப் பண்றதெல்லாம் நான் சினிமால பாக்கறதோட சரி.பிராக்டிக்கலா என்னால முடியதுப்பா"-சித்து
"சொல்லு டா சொல்லு...உனக்கு உதவின்னு கேப்பேல..அப்போ யார் உனக்கு பண்றானு பாக்றேன்."-முகத்தை திருப்பி கொண்டாலும் மென்னகை உதிர்க்க தவறவில்லை லக்ஷிதா.
ஆம்... தேஜசின் குடும்பம் பெண் பார்த்து சென்ற பிறகு அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் ஆழ்ந்திருந்த லக்ஷிதாவின் அப்பாவை ஒரு வயதான பெரியவர் அணுகினார்.அவரே தயாவின் பெரியப்பா.லக்ஷிதாவை பெண் கேட்டு வந்ததாக கூறவும் அதிர்ந்தார் லக்ஷிதாவின் தந்தை.ஏனனில் பெண் கேட்டு வந்தவர் ஊரில் மிகப்பெரிய பாரம்பரியத்தை சார்ந்தவர்.அவரிடம் தான் மக்கள் குறைகளை களைத்திட செல்வர்.
அவருக்கு மணம் ஆகவில்லை.தன் தம்பி குடும்பத்தையே தன் குடும்பமாக கருதுபவர். பெண் பார்க்கும் படலம் கேள்விப்பட்ட தயா, நேரம் கடத்தாமல் அவரிடம் முறையிட்டான்.தயாவின் மூலம் காதல் விவகாரத்தை அறிந்தவர் பெண் குடும்பத்தை பற்றி அலசிவிட்டு, பிறகே, ராஜிவ்(லக்ஷிதா அப்பா) வீட்டிற்கு தனியொருவராய் வந்துவிட்டார்.அவர் பேசி சென்றதும் வீட்டிலுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி, ஆச்சரியம் என பல்வேறுபட்ட உணர்ச்சிகள்.
ஏதும் விளங்காமல் நின்ற லக்ஷிதாவின் தந்தையிடம் லக்ஷிதா-தயா காதல் விடயத்தை உடைத்து, புரிய வைத்து,கிட்டத்தட்ட சம்மதிக்க வைத்தது நம் ஸ்ருதி தான்.