"அர்ஜுன் நில்லுடா"
தன் பின்னிருந்து கேட்ட ஆண் குரலில் அவன் கால்கள் தாமாய் நின்றன.
"என்னடா நெனச்சிட்ருக்க?எதுக்குடா என்னோட தங்கச்சியை அழ வைக்கிற?அவ வந்தப்போ நீ பிலைட்ல அவகிட்ட ரூடா பிஹேவ் பண்ணினேன்னு சொன்னப்போ கூட அவளுக்கு உன்ன அடையாளம் தெரியலேன்னு கோபத்துல அப்டி நடந்துகிட்டேன்னு நெனச்சேன்.ஆனா இப்போ...நானே அவள உன்கிட்ட சாரி கேக்க அனுப்பி உன் ரெஸ்பான்ஸ் என்னன்னு பாக்கலாம்னு அவ பின்னாடி வந்தா....என்னடா இப்டி பிஹேவ் பண்ற... ச்ச... நீயாடா இது",அனலாய் வந்த வார்த்தைகளால் அர்ஜுனை தாக்க முற்பட்டான்.
ஆனால் இவன் பெயரே அர்ஜுன் ஆயிற்றே...எவ்வளவு தாக்கினாலும்,அசராது மீண்டும் தாக்கும் குணம் கொண்டவன்.
முன்பெல்லாம் 'வாங்க,போங்க' என்று கதையளந்த சித்து இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை 'டா' சொல்லி அழைத்தது இவனுக்கு சிரிப்பாய் இருந்தது.
"என்னங்க சித்து சார்?என்னங்க கேட்டீங்க?நான் உங்க செல்ல தங்கச்சி கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிடேன்னா?ஒண்ணுயில்லேங்க சித்து சார்,அது என் பிரச்சனை,எனக்கும் உங்க தங்கச்சிக்கும் இருக்க பிரச்சனைங்க...நீங்க மூக்க நுழைக்க வேண்டிய அவசியம் இல்லேங்க சித்து சார்."-பொறுமையாய் வார்த்தைகளை வெளிக்கொணர்ந்தான்.
"என்ன மரியாதை எக்ஸ்பெக்ட் பண்றியா...எவ்ளோ தைரியம் இருந்தா என் தங்கச்சிய அழ வெச்ட்டு என்ன மூக்க நுழைக்க வேணான்னு சொல்றே.... இங்க பாரு அர்ஜுன்... நீ என்னோட இவ்ளோ நாள் பழகுனதுல இருந்து நான் உன்ன கொஞ்சம் புரிஞ்சிருக்கேன்... பொண்ணுங்க கிட்ட அதிர்ந்து பேசவே... ஏன்... பேசவே யோசிக்கிறே நீ என் தங்கச்சியை ஏன் இப்டி ஹர்ட் பண்ண?",அர்ஜுனின் நட்புக்கு மரியாதையளித்து இறங்கி வந்தான்,அந்த அண்ணன்.
"என்ன...சித்து சாமி மலை ஏறிடுச்சா... ஹஹ்.... போடா போ... நீ சொல்றது கரெக்ட் தான்... நான் ஏன்டா தேவையில்லாம உன் தங்கச்சிய அவாய்ட் பண்ண போறேன்!இவ்ளோ நாளிலே அவள பத்தி உன்கிட்ட ஏதாவது சொல்லியிருப்பேனா?அவளா இப்போ வந்து பேசவும் தான நானும் அப்டி பேசினேன்.காரணம் இருக்குனு தெரியுதில்லை...அந்த ரீசன என்னால சொல்ல எல்லாம் முடியாது...இப்போ அத சொன்னாலும் இங்க யாரலையும் புரிஞ்சுக்கவும் முடியாது...நான் சொல்றத கேளு.. இனிமே உன் தங்கச்சிய என் கண்ணு முன்னாடி வர வேண்டான்னு சொல்லு..பாத்து இருக்க சொல்லு.....எங்கயாச்சு,எப்போவாச்சு என்கிட்ட பேச வரத பாத்தேன்... அப்றம் நடக்குற எதுக்கும் நா பொறுப்பில்ல",ஒவ்வொரு வார்த்தைக்கும் மிகுந்து அழுத்தம் கொடுத்து பற்களின் இடுக்கில் சொற்களை குவித்து கொட்டிவிட்டு சென்றுவிட்டான் அவன்.