"மீரா,மீரா...மீருகுட்டி.....மீரு..."
கூப்பிட்டப்படியே வந்தவனை ஆச்சர்யம் தாளாமல் ஏறிட்டாள் ஸ்ருதிமீரா.
"அண்ணா,என்னதிது புதுசா?நீ எப்போமே மீரா னு கூப்பிடவே மாட்டியே!அந்த பேர் உனக்கு பிடிக்கலேன்னு தானே நீ சுமி னு சுருக்கி கூப்டுவே....இப்போ என்ன ணா ஆச்சு உனக்கு?பர்ஸ்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு வந்து மரம் கழண்ட்ருச்சா?"
"ஒன்னுல்ல சமி சும்மா கூப்பிட்டு பாத்தேன்."
"அண்ணா உண்மைய சொல்லு...என்ன பண்ணிட்டு வந்த மீட்டிங்ல?சமாளிக்கத்தான் இப்டி ஒரு மாதிரி பேசரியா?"-ஸ்ருதி.
"ஹிஹி... இல்ல இல்ல சுமி...மீட்டிங் ல நான் நல்ல பேர்போர்மன்ஸ் தான் குடுத்தேன்.கிட்டத்தட்ட நமக்கு பாசிட்டிவா தான் ரெஸ்பான்ஸ் வரும்.",பெருமையுடன் கூறினான்.
"ஹே அண்ணா சூப்பர்...என்னோட அண்ணான்னா சும்மாவா... ரெண்டு வருஷம் பாரிஸ் ல போய் படிச்ட்டு வந்திருக்க.... இந்த சப்ப மீட்டிங் லாம் உனக்கு சால்ட் வாட்டர் மாதிரி"
"ஏய் டாகி,பாரிஸ் போய் படிச்சு என்ன யூஸ்...இந்த மீட்டிங் கு நான் பட்ட பாடு இருக்கே....பா....அஜ்ஜு மட்டும் இல்லேன்னா நான் சொதப்பிர்ப்பேன்."
"எப்படியோ நல்லபடியா முடிச்டெல்ல...இனிமே எல்லாமே நல்லாதவே நடக்கும்.உன்னோட கரியர் இனிமே தான் ண்ணா ஸ்டார்ட் ஆக போகுது...அப்பா வ விட நீதான் பேர் வாங்கணும் சரியா?",செல்லம் கொஞ்சியபடியே வந்து கட்டியணைத்த தங்கையை தூக்கி தட்டாமாலை சுற்றினான் சித்து.
"அண்ணா இன்னும் சுத்து.. இன்னும்... ஜாலியா இருக்கு",என அந்த தங்கையும் இணைந்து கொண்டாள்.
"ஏய் ஏய், வயசு பசங்க மாதிரியா இருக்கீங்க, தம்பி அவளை இறக்கி விட்ரா கீழ.கொஞ்சமாச்சும் வயசு பத்தி அறிவு இருக்க ரெண்டுக்கும்?"என திட்டிக்கொண்டே வந்த அமலா பாட்டியை பார்த்து சித்துவும் ஸ்ருதியும் விளையாட்டை நிறுத்தினர்.
"எப்போவாச்சு தூக்கிறதுதான் அப்பத்தா. இப்போவே இந்த வெய்ட் இருக்கா...இனிமே கொஞ்ச நாள் ல என்ன வெய்ட் ஏற போறாளோ...அண்ணன் தங்கச்சி குள்ள ஆயிரம் இருக்கும்...வயசு ஏறுனா என்ன இப்ப?",என சித்து நியாயப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும்போதே....