விமானம் தரையிரங்கும்வரை இருவரும் எதுவும் அளவளாவிக்கொள்ளவில்லை.அவனிடமிருந்து ஒரு சிறிய பார்வை பரிமாற்றம் கூட இல்லை.ஸ்ருதியை இது மிகவும் சலனப்படுத்தியது.
கல்லூரியில் நிறைய பேர் இவளிடம் காதல் பாஷை பேச எத்தனித்து இவளிடமிருந்து பதில் வராததால் தோற்று திரும்பியுள்ளார்.ஆனால் இவனோ, அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.அது ஒன்றும் ஸ்ருதிக்கு பெரிதாக தோன்றவில்லை. காரணமே இல்லாமல் அவன் ஸ்ருதியை நிரகரிப்பதாக தோன்றியது.அது இவளை காரணமே இல்லாமல் மிகவும் காயப்படுத்தியது.
ஏர்போர்டிற்குள் நுழைந்தவுடன் ஸ்ருதி வாஷ்ரூமிற்குள் புகுந்துகொண்டாள். அலைபேசியை எடுத்து சித்துவிற்கு கால் செய்து ஹைதராபாத் வந்து விட்டதாக தெரிவித்துவிட்டு,"அண்ணா,உனக்கு என்னோட துணைக்கு அனுப்ப வேற ஆளே கிடைக்கலையா?அந்த அவரைத்தான் அனுப்பணுமா?",என பொறிந்தாள்.
"என்னது துணைக்கா?உனக்கு நான் ஆள் அணுப்புனேனா?என்ன உளருற?மனசுல ஸ்கூல் பொண்ணுன்னு நெனப்பா உனக்கு?",என சிரித்தான் சித்து.
"என்னது நீ அனுப்பலயா?அப்படித்தான் ணா அவரு சொன்னாரு.",என குழம்பினாள்.
"ஏய் யாரு வந்தா உன்கூட?யாருன்னே தெரியாதவன் கூட வந்தியா?என்ன சொன்னான் அவன்?அவன் யாரு பர்ஸ்ட்?உன்ன அவனுக்கு எப்டி தெரியுமாமா?",கோபத்துடன் கேட்டான்.
"ஐயோ அண்ணா அவர் யாருன்னே தெரில.ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுனாரு.உன் பிரின்ட்னு நெனச்சேன்.அவர்க்கு தெரியும் போல என்ன,எனக்குத்தான் அவரை தெரியல.",என பேசிக்கொண்டிருக்கும்போதே அவளின் கால் ஹோல்ட் செய்யப்பட்டது.
"ஹலோ....அண்ணா ஹலோ",என முயற்சி செய்துவிட்டு காலை கட் செய்து விட்டாள்.
பின் வெளியே வந்து குழப்பத்துடன் அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தாள்.கூடவே முன் சென்று கொண்டிருந்த அந்த வெள்ளை சட்டைக்காரனை காணோம்.
'ஒருவேளை,பிலைட் ல என்ன வச்சு டைம்பாஸ் பண்ணாரோ?எதேச்சையா ஹெல்ப் பண்ண வந்துருப்பாரு.விளையாட்டுக்கு என்ன தெரிஞ்ச மாதிரி பேசியிருப்பாரோ?அண்ணாக்கு கூட தெரிலேயே.படத்துல பாக்கிற மாதிரி ஷார்ட் டைம் பிலைட் பிரின்ட்ஷிப் போல!',என எதையெதையோ கற்பனை செய்துகொண்டு தன் உடமைகளை எடுத்துக்கொண்டு திரும்பும் நேரம் அவள் அலைபேசி அலறியது.