13

1.6K 61 79
                                    

அர்ஜீன் கூறிய விடையிலிருந்து வினாக்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது விஷாலால்.

"டேய் அது நம்ம ஸ்கூல் ரைட்..!!டெண்த் வரைக்கும் அங்க தான படிச்சோம்.நம்ம கிளாஸ் மேட்டா அவ?அப்டி தெரிலேயே!நம்ம கூட படிச்ச புள்ளைங்கெல்லாம் இப்போ கைல ஒண்ணு வயித்துல ஒண்ணுன்னு சுத்துதுங்க.... இவ சின்ன பொண்ணா இருக்காளே....டேய் ஜூனியர் பொண்ணா?தெரியுமா இவள உனக்கு?இவ்ளோ ஞாபகமா சொல்றே?துர்வாசருக்கே காம்படிஷன் குடுக்கிற நீயே பேரு,க்ளாஸ் எல்லாம் சொல்ற!!யார்ரா அவ?"

"உன்னோட கேள்விலயே பதில் இருக்கு விஷால்.துர்வாசருக்கே காம்படிஷன் குடுக்ற என்னயே பேரு, க்ளாஸ் னு ஞாபகமா சொல்ல வெச்சுருகான்னா,யாருடா அவ?"

அர்ஜுனின் அந்த கூறிய பார்வையும்,இறுகிய முகமும் விஷாலுக்கு எதையோ ஞாபகப்படுத்தின.

அவன் புரிந்துகொண்டான் என்பதற்கு சாட்சியாக அவன் அகம் மெதுமெதுவாக அதிர்ச்சியை தத்தெடுத்துக்கொண்டது.அவனது முகமாற்றத்தை கவனித்த அர்ஜுன்,"இப்போ புரிதா,அவகிட்ட ஏன் இப்படி நடந்துக்கறேன்னு",என்று கூறிவிட்டு மடமடவென்று நடக்கத்தொடங்கினான்.

விஷாலுக்கோ இரு நிமிடங்கள் பழைய நினைவுகளும், தற்போதைய நிகழ்காலமும் மாறிமாறி குழப்பத்தை ஏற்படுத்தின.

"அர்ஜுன்,அர்ஜுன் ஸ்டாப் டா...எப்டி டா அந்த பொண்ணு இவ தான்னு இவ்ளோ கான்பிடன்ட்டா சொல்றே?அவளை ஒரே தடவ தான பாத்துருக்கே!உன் கெஸ் தப்பா கிப்பா இருக்க போகுது டா",மூச்சிரைக்க பின்னோடி வந்தான் அவன் உயிர் தோழன்.

அந்த நொடி அர்ஜுனின் கால்கள் விருட்டென்று நின்றன.
"ஹஹ்!! என்னோட கெஸ் தப்பா?அதும் இந்த விஷயத்துலயா?நீ வேணா மறந்திருக்கலாம்,என்னால எப்டி டா மறக்க முடியும்?ஒரு நாளாவது அத பத்தி நெனைக்காம இருந்திருக்கேனா நான்?எல்லாருக்கும் ஸ்கூல் பத்தி நெனச்சாலே சந்தோஷம் வரும்போது,அங்க கூனிக்குறுகி நின்ன எனக்கு?வெறுப்பா இருக்கும்...அழுகையும், அசிங்கமுமா இருக்கும்....உனக்கென்ன டா... உனக்கா நடந்துச்சு எல்லாம்?அவ பேர்கூட மறந்துடேல்ல நீ",சிவந்த விழிகளும் மங்கிய குரலும் விஷாலை கலங்கடிப்பதற்கு பதிலாக கோபமூட்டின.

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now