Part- 2

8.2K 193 13
                                    

முதல் நாள் வேலை அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. முக்கிய கோப்புக்களை படித்து விட்டு ஸ்டேசனின் தினசரி நடைமுறைகளைதெரிந்து கொண்டான்....

அங்கு சந்தியாவோ அவளின் தோழியை திட்டிக்கொண்டிருந்தாள், அலுவலக பணத்தை தொலைத்து விட்டாள் என்பதற்காக!!....ஏன்டி இவ்வளவு கேர்லஸ் ஆக இருப்பாயா??... ஒரு ருபாயா...இரண்டு ருபாயா????...பத்து இலட்சம்.......எங்கபோறது??....சந்தியா. எல்லாம் என்னை சொல்லனும்..நானே போயிருக்கனும்....

எனக்கு ஒரு இம்பார்டென்ட் மீட்டிங்க் இருக்கு என்று தான் உன்னை அனுப்பினேன்...இப்போ என்ன செய்வது??? சார் வேற நேற்றே கூறினார்....தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று... நான் தான் பெரிய இவ்வளாட்டம் ஒரே நேரத்தில் அவ்வளவு பணத்தை எடுப்பது நல்லது இல்லை தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம் என்றேன்...

இப்போ சார்க்கு என்ன பதில் சொல்லுவது என்று புலம்பிக்கொண்டிருந்த சந்தியாவிடம் திவ்யா எதுக்கும் ஒரு போலிஸ் கம்ப்ளெண்ட் கொடுத்து விடலாம் என்றாள்.....செய்வதும் செய்து விட்டு இப்போ வந்து வியக்கியானம் பேசுறியா????....என்று கடுக்கடுத்தாள்....

அதை கேட்டதும் முகம் சுருங்கிய திவ்யா நான் ஒன்னும் வேணும் என்று செய்யவில்லை என்றாள்... நானும் நீ வேணும் என்று செய்தாய் என கூறவில்லை, கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்...சந்தியா.இப்போ சார் ஏன் என்னை கேட்காமல் கம்பளெண்ட் கொடுத்திங்க என கேட்டா என்ன சொல்றது???..... சந்தியா..

அது அப்புறம் யோசித்துக்கொள்ளாம்...இப்போதைக்கு இது தான் பெஸ்ட், பின்னாடி நம் மீது யாரும் சந்தேக பார்வையுடன் பார்க்க மாட்டார்கள் என்றாள்...சந்தியாவிற்கும் அவள் கூற்று சரியென பட இருவரும் போலிஸ் ஸ்டேசனை நோக்கி பயணப்பட்டனர்.....ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இது அவளின் வாழ்வில் திருப்புமுனை என்று.....

காவல் நிலையத்தில் நுழைந்த இருவரும் அங்கிருந்த கான்ஸ்டெபிளிடம் சார் ஒரு கம்ப்ளெண்ட் கொடுக்க வேண்டும் என்றனர்...அவர் நிமிர்ந்து ஒரு வினாடி நோக்கி விட்டு உள்ளே சார் இருப்பாங்க போய் கொடுங்க என்று கூறிவிட்டு அவரின் வேலையை தொடர்ந்தார்...

என் உயிரானவளே (முடிவுற்றது)Where stories live. Discover now