Part 29

4K 124 31
                                    

நாட்கள் அதன் போக்கில் நகர சரணிற்கு காயம் முழுவது குணமாகி வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்..ஆதியும் திவ்யாவும் தங்களது 1 வாரம் குளுமணாலி டிரப்பை 2 வாரத்தில் முடித்து விட்டு நேற்று தான் வந்திருந்தனர்.

ஞாயிற்றுகிழமை என்பதால் சரணையும் சந்தியாவையும் காண வந்திருந்தவர்களை சந்தியா மிகுந்த உற்சாகத்தில் வரவேற்றாள். வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு சந்தியா இருவரிடமும் இன்னைக்கு நான் தான் சமைக்க போறேன் இரண்டு பேரும் சாப்பிட்டுதான் போறிங்க என கூற திவ்யாவோ உன் சமையலா வேண்டாம்டி நாங்க பாவம் என கூற சரண் இல்லமா சந்தியா சூப்பரா சமைப்பா..! என கூற என்ன "அண்ணா பொண்டாட்டிக்கு சப்போர்டா?", திவ்யா.அப்படி எல்லாம் இல்ல உனக்கு வேண்டாட்டி போ!உன்னோட லக் அவ்வளவு தான்னு நினைச்சுகறேன் என கூற சந்தியாவோ இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டு பெருமையுடன் திவ்யாவை பார்த்தாள்.

சரி சரி நீங்க இவ்வளவு சொல்லறதுனால சாப்பிடுறேன் எனதிவ்யா கூற சந்தியா தன் வேலைகளை கவனிக்க சமையல் அறைக்குள் சென்றாள். அவளுக்கு உதவுவதற்காக் உடன் சென்ற திவ்யா சந்தியாவை அணைத்துக் கொண்டு "ஐயம் சோ ஹேப்பி பார் யூ டி எப்படியோ நீங்க இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டிங்கனு நினைக்கிறேன்" என்றாள்.

"ஹே! உன் கற்பனை குதிரைய ரொம்ப ஓட விடாத கொஞ்சம் கட்டிவை..நீ நினைக்கற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல!", சந்தியா. "என்னடி சொல்ற நீ இன்னமும் அண்ணன புரிஞ்சுக்கவே இல்லையா?" , திவ்யா.

"எனக்கு என்ன சொல்றதுனு தெரியல..முன்னாடி எல்லாம் அவன் கூட பேசவே கூடாதுனு நினைப்பேன்..ஏன்னு தெரியாமலே அவன் மேல கோபமாவரும்! இப்போ அவனை பற்றி ஒரு மணிநேரத்துக்கு 10 தடவையாவது யோசிக்கறேன்..அவன் கூட இருக்கும் போது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு அவன் கண்ண பார்க்கும் போது என்னைய அதில தொலைக்கற மாதிரி இருக்கு பட்..இதுக்கு பேர்லாம் என்னனு எனக்கு தெரியல..ஒரு சில டைம் இப்படியே லைப் லாங்க் அவன் கூடயே இருந்திறமாட்டோமானு கூட தோணும்...ஆனால் அப்போலாம் இது நம்ம அம்மா சம்மதம் இல்லாம பண்ணிக்கிட்ட கல்யாணம்..அவுங்க என் லைப்காக இதை எத்துகிட்டாலும் அவுங்க மனசுல ஒரு வேதனை இருந்துகிட்டு தானே இருக்கும் அதலாம் நினைக்கும் போது அவுங்கல கஷ்டபடுத்திட்டு ஒரு லைப் வேணூமானு தோணுதுடி" என்றாள் சந்தியா.

என் உயிரானவளே (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz