Part 12

3.3K 120 23
                                    

யாருக்கும் காத்திராமல் சூரியன் தன்பணியை செய்ய ஆரம்பிக்க அழகாக விடிந்தது அந்த காலை பொழுது.... காலை 8 மணிக்கே எல்லோரும் தயாராகி கீழே வந்து விட்டனர். சந்தியாவிற்கும் காலில் வலி அவ்வளவாக இல்லாததால் அவளும் அவர்களுடன் தயாராகி வந்துவிட்டாள்.

சரண் அவளை கண்டதும் அவளின் வலி எவ்வாறு இருக்கிறது என விசாரிக்க எண்ணியவன் அவள் பார்வை சற்றும் இவள் புறம் திரும்பாமல் இருப்பதை அறிந்து அமைதியாகிவிட்டான்..

கிருஷ்ணண் அவளை கண்டதும்...எப்படிமா இருக்கு? இன்னும் வலி ஏதாவாது இருக்கா..? என்றார். வலி எதுவும் இல்லை அங்கிள் சரியாகிடுச்சு என்று அவள் கிருஷ்ணனிடம் கூறிய பிறகுதான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது..அவள் தன்னுடன் பேசுவதும் பேசாததும் இரண்டாம் பட்சம் அவள் நலமாக இருப்பதே போதுமானது என்று எண்ணியது அவனின் காதல் கொண்ட மனம்.

சற்று நேரத்தில் பாலாவும் வந்திட அவர்களின் இன்றைய பிளானை பற்றி அவன் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான். முதலில் ரோஸ் கார்டன்,பிறகு ஸ்டிபன் சர்ச், wax world, ஸ்டொன் ஹவுஸ் கடைசியாக பொட்டானிக்கல் கார்டன் இதுதான் இன்னைக்கு நம்ம பார்க்க போறது என்றான் பாலா.

காலை உணவிற்கு பின் எல்லோரும் ரோஸ் கார்டனிற்கு புறப்பட்டனர்...இடையில் சரண் அவளை ஒரு முறையாவது என்னை பார்க்க மாட்டாளா என்ற ஏக்கத்துடன் அவளை காண அவளோ அவனின் புறம் மறந்தும் திரும்பிவிட கூடாது என்ற குறிக்கோளோடு அவனை காணாதவாறு இருந்தாள்.. இதனை இரு ஜோடி கண்கள் கண்டு கொண்டிருந்தன...

ரோஸ் கார்டனில் மலர்களின் அழகில் தங்களை தொலைத்திருந்தவளின் அருகில் வந்த ஆதி ஹாய் திவ்யா என்றான்..திடிரென்று அவனின் பேச்சில் சற்று பயந்த திவ்யா தன்னை சமன் செய்துக்கொண்டு ஹ..ஹாய் என்றாள்.. ஹே என்ன ஏதோ பயந்த மாறி தெரியுது...ஆதி..ஆமா இப்படி திடிரென்று வந்து நின்னா பயப்படாமா என்ன பண்றது என மனதினுள் நினைத்துக்கொண்டு அது எல்லாம் ஒண்ணும் இல்லை என்றாள்... அப்புறம் டூர்லாம் எப்படி போகுது என்றான் ஆதி.ம்ம் நல்லா போகுது என் உங்களுக்கு..? ம்ம் அதுக்கென்ன சூப்பராதா..ன் போகுது என இழுத்தான்..ம்ம் என்றவாறு அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு.. என்ன விசயம் எதாவது சொல்லனுமா என்று நேரடியாக கேட்க சற்று அதிர்ந்தவன் சொல்ல எதுவும் இல்லை பட் ஒன்னு தெரிந்துக்கணும்தான் வந்தேன்...ஆதி

என் உயிரானவளே (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora