Part 7

5K 147 33
                                    

தன் கதிர்கள் மூலம் சந்திரனிற்க்கு ஓய்வளித்து தன் பணியை செவ்வனே கதிரவன் தொடங்க இரைத்தேடி பறவைகள் ஓட இனிய பொழுதாக அக்காலை ஆரம்பிக்க தன் அடுத்த வேளை உண்விற்க்காக ஓடும் பறவைகளுக்கும், பாமர மக்களுக்கும் அது சாதாரண நாளாக தோன்றினாலும் வியாபார யுக்தியால் பெரிய அளவில் சித்தரிக்க பட்டு உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்களின் கனவு தினமாக இருக்கும் பிப்ரவரி 14 ஆன இன்று எல்லா காதலர்களை போலவே சரணும் தன் உயிரானவளை காணும் ஆவலோடு தயாராகி கொண்டிருந்தான்.

அச்சோ இது என்ன இவ்வளவு நவர்ஸா இருக்கு..ஏதோ பதினாறு வயசு பையனை மாதிரில பயப்பட்டுக்கிட்டு இருக்கேன்....சரண் பி கான்பிடண்ட் உன்னால முடியும் என இன்டர்விக்கு செல்லும் மாணவர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை தயார்படுத்தி கொள்வதை போல் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான் சரண்.

அப்போது அங்கு வந்த ஆதியோ மச்சி எங்கடா கிளம்பிட்ட இன்னைக்கு டியுட்டிக்கு போகலயா?? முக்கியாமான நாள் வேற.....-ஆதி. ஆமாடா முக்கியமான நாள் தான் அதான் லீவு போட்டேன்......-சரண்.என்னடா உலற? முக்கியமான நாளுனு லீவு போட்டயா? நீ லீவு போட்ட பின்ன யாரு பார்க்கு போய் அரஸ்ட் பண்ணுவா என்றான் ஆதி.டேய் நான் உலரேனா இல்ல நீ உலறயா....?? நான் ஏன்டா பார்க்ல போய் அரஸ்ட் பண்ண போறேன் என புரியாமல் சரண் முழிக்க...டேய் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மதுரைல இராஜாஜி பார்க்ல இருந்த லவர்ச அரஸ்ட் பண்ணி அவுங்க பெற்றோர்கிட்ட மாட்டிவிட்டு என்ன மாதிரி சிங்கிள்ஸ் வயித்தில பாலை வார்த்தாங்கள்ள உங்க டிபார்ட்மெண்ட் அது மாதிரி நீயும் இன்னைக்கு பண்ணுவனு பார்த்தா நீ என்னடா இப்படி சொல்ற என சற்று வருத்தாமாக கேட்டான் ஆதி.

அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தபடி வர வர யாரு யாரு என்ன பேசனும்னே ஒரு விவஸ்த்தை இல்லாம போயிடுச்சு....நீ சிங்கிளாடா...? என்றான் சரண்.

அதற்க்கு ஆமாம்டா நான் சிங்கிள் தான் என்ற ஆதியை இந்த பொய்யை யாருக்கிட்ட வேணாலும் போய் சொல்லு ஆனா உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்ச எங்கிட்ட சொல்லாத என்றான் சரண்.

என் உயிரானவளே (முடிவுற்றது)Where stories live. Discover now