சென்னை வந்தடைந்த தீக்ஷித், இப்பொழுதே சென்று விஹானாவின் தந்தையிடம் பேசிவிடலாமா? என்று நினைத்தான்.பின்னர் நேரத்தை உணர்ந்து நாளை சென்று அவரிடம் பேசிவிட்டு விஹானாவையும் சந்தித்து விட்டுத்தான் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
காலை எல்லாருக்கும் வழக்கம்போல் விடிய தீக்ஷித்திற்கு மட்டும் உற்சாகமாய் விடிந்தது. இவனும் காலையில் சீக்கிரமே குளித்து தயாராகி கீழே சென்றான். அவனுக்கு காலை உணவை எடுத்துவைக்க வந்தவரிடம் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு வேகமாய் காரை நோக்கி சென்றான். அவன் எப்பொழுதும் உணவை புறக்கணிப்பவன் அல்ல. ஆனால் அன்று விஹானாவை காண செல்வதால் மகிழ்ச்சியில் எதுவும் தோன்றவில்லை.
இன்று அவன் காரோட்டியையும் வேண்டாமென்றுகூறிவிட்டு தானே காரை ஓட்டினான். நேராக விஹானாவின் வீட்டை சென்றடைந்தான். அவளின் வீட்டை அடைந்ததும் காலிங் பெல்லை அழுத்தினான். அவனென்னவோ விஹானா ஓடிவந்து திறப்பாள் என்று பார்த்தவனுக்கு அவளின் தந்தை திறந்தது சற்று ஏமாற்றம் அளித்தது.
நீங்கள் யார்? யாரை? பார்க்க வந்துள்ளீர்கள், என்று கேட்டார் விஹானாவின் தந்தை. பின்னர் அவரே உள்ளே வாருங்கள் என்று கூறி தீக்ஷித்தை உள்ளே அழைத்து சென்றார்.
குடிக்க கொஞ்சம் தண்ணீர் தந்துவிட்டு பேச ஆரம்பித்தார் இல்லை இல்லை கேட்க ஆரம்பித்தார்.
அவனுக்கும் தண்ணீர் சற்று தேவையாய் இருந்தது. மடமடா வென்று குடித்தவன் தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
விஹானா வீட்டில் இல்லையா? என்று கேட்டான். அதற்கு அவர் தந்தை காலையில் தான் சிறப்புவகுப்பென்று பள்ளிக்கூடம் சென்றாள். அவளுக்கென்ன ஆக்ஸிடென்ட் எதாவது ஆகிவிட்டதா என்று பதறியபடி விசாரித்தார்.
அதற்கு அவன் இல்லை இல்லை அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை என்று கூறினான். நான் உங்களிடம் விஹானாவை பற்றித்தான் பேச வேண்டும் என்று கூறினான்.
அவளை பற்றிப்பேச என்ன இருக்கிறது என்று கூறினார். நான் சொல்வதை கேட்டுவிட்டு பின்னர் கூறுங்கள் என்று கூறினான்.
அவன் முதலில் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறினான். பின்னர் அவர்கள் முகமாற்றத்தை குறித்துக்கொண்டு மேற்கொண்டு பேசினான். அவன் பேசிமுடித்ததும் முதலில் அவன் கூறியதை மறுத்தவர்கள் அவன் தன் கையிலிருந்தவற்றை காண்பித்ததும் ஒப்புக்கொண்டார்கள்.
அதனால் கோபமாக இருந்த தீக்ஷித்தின் முகத்தில் சிறு முறுவல்
தென்பட்டது.
இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று தீக்ஷித்தை பார்த்து கேட்டார்.
நான் விஹானாவை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினான்.
அதனைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியானார்கள். அவர்களின் அதிர்ச்சியை கண்டுக்கொள்ளாதவன் இப்போதைக்கு நீங்கள் விஹானாவிடம் கூறவேண்டாம் பொறுமையாக எடுத்துக்கூறினால் புரிந்துகொள்ளுவாள் ஆனால் அவளுக்கு உண்மை காரணம் தெரியவேண்டாம் என்று கூறினான்.
விஹானாவின் தந்தை இதற்கு நாங்களே இன்னும் ஒப்புக்கொள்ளவில்லையே? என்றுக் கேட்டார்.
அதற்கு அவன் ஒப்புக்கொள்வதைக் காட்டிலும் வேறு வழியில்லை என்று கூறினான்.
அதற்கு அவர் ஆனால் விஹானா இன்னும் பள்ளிப்படிப்படிப்பையே இன்னும் முடிக்கவில்லை சிறுபெண் ஆயிற்றே. உங்களின் பழக்கவழக்கம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது அத்துடன் நீங்கள் அளித்த அதிர்ச்சியை எங்களாலே தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவளோ சிறுபெண் அவள் எப்படி? என்று இழுத்தார்.
எனக்கு உங்களின் சம்மதமும் முக்கியமில்லை விஹானாவின் சம்மதமும் முக்கியமில்லை அவள் சம்மதித்தாலும் சரி சம்மதிக்காவிட்டாலும் சரி அவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாய் கூறினான்.
நாங்கள் உன்னை எப்படி நம்புவது என்று கேட்டார். அதற்கு அவன் இந்த கேள்வியை நான்தான் உங்களிடம் கேட்கவேண்டும். ஏனெனில் விஹானா எங்கள் குடும்ப வாரிசு அவளை நான் இப்பொழுதே எங்கள் அரண்மனைக்கு கூட்டிட்டு செல்ல முடியும். ஆனால் நான் உங்கள் நிலை கருதி மிகவும் பொறுமையாக இருக்கிறேன் என்று கூறினான்.
விஹானாவின் தந்தை அவளின் பள்ளிப்படிப்பு முடிந்தபின் இதைப்பற்றி பேசலாமே இன்னும் ஒருவருடம்தானே இருக்கிறது என்று கூறினார்.
உடனே அவன் திகைத்து, இதே ஒரு வருடத்தைத்தானே தன் பெற்றோரும் கூறியுள்ளனர் என்று நினைத்து பின்பு, விஹானாவின் பெற்றோரிடம் ஒரு வருட முடிவில் அவள் என்னுடன் ஜாம்ஷெட்பூர் வர வேண்டும் என்று கூறினான்.
அவர்களும் நாங்கள் இந்த ஒரு வருடத்தில் அவளுக்கு புரியும்படி விளக்குகிறோம் என்று கூறினர்.
என்னை அவளுக்கு முதலில் அறிமுகப்படுத்தி வையுங்கள் என்று கூறினான்.
அதற்கு விஹானாவின் பெற்றோரோ என்னவென்று நாங்கள் அறிமுகப்படுத்துவது என்று கேட்டனர்.
அதற்கு அவன் உங்களின் நண்பனின் மகன் அப்படி இப்படி என்று எதாவது கூறி அறிமுகப்படுத்துங்கள் என்று கூறினான்.
அவரும் சரி அடுத்த மாதம் அவளுக்கு அறிமுக படுத்துகிறேன் என்று கூறினார். அதற்கு அவன் இன்றே அறிமுகப்படுத்தலாமே என்று கூறினான். அதற்கு அவர் அவளுக்கு பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
அவனும் என்னிடம் இருந்து ஓடிஒழிய நினைக்காதீர்கள் அது என்னிடம் என்றைக்கும் நடக்காது. நீங்கள் எங்கு சென்றாலும் நான் கண்டுபிடித்துவிடுவேன். என் ஆட்கள் இங்கே உங்களை கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். அவன் சென்றதும் விஹானாவின் தாய் என்னங்க, நாமே மறந்த விஷயத்தை இவன் எப்படி கண்டுபிடித்தான் என்று கேட்டார். அதற்கு அவரோ நாமே மறந்த விஷயம் அல்ல மறக்க முயற்சித்த விஷயம் இப்படியெல்லாம் நடக்கும் என்று நாம் ஏற்கெனவே எதிர்பார்த்தது தானே என்று கூறினார். ஆனால் நானே எதிர்பாராதது இப்பொழுது வந்து சென்றவன் என்று கூறினார்.
விஹானாவின் தாயோ இவனால் விஹானாவிற்கு ஒன்றும் ஆகாதே என்று கேட்டார். அதற்கு அவரோ பாப்போம் இவனை பற்றி நமக்கு இன்னும் சரியாக தெரியவில்லையே. இந்த ஒருமாதத்தில் அவனை பற்றி விசாரிப்போம் என்று கூறினார்.
இங்கு தீக்ஷிதோ காலை மாலை என்று இருவேளையும் அவளை காண சென்று விடுவான் காலையில் அவள் வீட்டில் கிளம்பியதும் அவளை தொடர்ந்து வந்து அவள் பள்ளிக்குள் சென்றதும்தான் நகர்வான். மாலை அதே போல தொடர்ந்துவந்து அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் தான் கிளம்புவான்.
இதற்கிடையில் ஒருநாள் அவள் அஞ்சலியின் தம்பியுடன் பேசிக்கொண்டே வெளியில் வந்தாள். எப்பொழுதும் அவளும் அஞ்சலியும் தான் ஒன்றாக வந்து போவார்கள்.இன்று அவளின் தம்பி அஞ்சலியுடன் அவர்களின் சித்தப்பா வீட்டிற்கு செல்வதால் அவளுடன் வந்தான்.
அஞ்சலியின் தம்பியுடன் விஹானா சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்து கோபமடைந்த அவன் தன் கைமுஷ்டிகளை இறுக்கி அனலை பார்வையால் கக்கி கொண்டிருந்தான்.
அவர்களை கோபத்துடன் பின்தொடர்ந்தவன் அஞ்சலியும் அவனும் பாதி வழியில் விஹானாவிற்கு பை சொல்லிவிட்டு வேறு வழியில் செல்வதை பார்த்தவன் கொஞ்சம் கோவத்தை விட்டொழித்தான். பின்னர் விஹானாவை பின்தொடர்ந்து வந்த அவன் அவள் திடிரென்று நிற்பதை பார்த்தவன் தன் வண்டியை நிறுத்திவிட்டு என்னவென்று பார்த்தான். விஹானவோ சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பயத்துடன் பார்த்தவாறே ஏதோ செய்துகொண்டிருந்தாள்.
கிட்ட சென்று என்னவென்று பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்தது. சைக்கிளின் பின்னாடி வீலில் அவளின் துப்பட்டா மாட்டிக்கொண்டதை எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள்.
அவன் அவள் பக்கத்தில் சென்று, நான் எடுத்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு எடுக்க முயற்சிதான் அவளின் அனுமதி பாராமல், இதனை எதிர்பாராதவள் அதிர்ச்சியில் அவனை ஒருநொடி பார்த்தவள் அவன் குனிந்து துப்பட்டாவை எடுப்பதை பார்த்தவள் வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
அவன் எடுத்துவிட்டதும் விட்டால் போதுமென்று சைக்கிளை மிதித்து வேகமாக சென்றாள்.
அவள் நம் முகத்தை பார்க்கவே இல்லையே என்று அவளை பார்த்து ஒரு தேங்க்ஸ் கூட
சொல்லமாட்டாயா என்று கேட்டான். அவளும் பின்னால் திரும்பி பார்க்காமல் தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவனோ காரில் உட்கார்ந்துகொண்டு அவள் என் முகத்தை கூட பயந்துகொண்டு பார்க்கவில்லையே ஆனால் அந்த பையனிடம் மட்டும் சிரித்து பேசுகிறாள் என்று நினைத்துக்கொண்டான். முதலில் அந்த பையன் யாரென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்து தன் மானேஜரை அழைத்து விஷயத்தை கூறி விசாரிக்குமாறு சொன்னான்.
விஹானாவின் தந்தையிடம் தீக்ஷித் என்ன கூறியிருப்பான். அவர் எதற்கு இவன் கூறுவதை கேட்கிறார் என்பதை இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
அதுவரை காத்திருங்கள்.
YOU ARE READING
என் சுவாசத்தின் மறுஜென்மம்
Romanceஇறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி த...