[மேலே படத்தில் இருப்பவர் யார் இந்த கதையில் அவருக்கென்ன கதாபாத்திரம் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.இந்த கதாபாத்திரத்தால் கதையில் திடுக்கிடும் மாற்றங்கள் நிகழ உள்ளன ]
மாடிப்படி மேலே இருந்து கீழே நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த விஹானாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. தீக்ஷித் கெட்டவன் என்று மட்டும் புரிந்தது.
விஹானா கீழே இறங்கி வருவதை பார்த்த தீக்ஷித் தான் பேச வந்ததை பாதியிலேயே விட்டுவிட்டு அவளை காண ஓடினான்.
மற்றவர்கள் அனைவரும் அவளை சூழ்ந்துகொண்டனர். அனைவரையும் அருகில் பார்த்த அவள் சற்று மிரண்டுபோய்விட்டாள்.
அவளிடம் அனைவரும் ஒன்றாக பேச, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு புரிந்ததெல்லாம் இங்கிருந்து உடனே கிளம்பிவிடவேண்டுமென்பதே !!!
உடனே பயத்தில் அவள் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று அழுதாள். எல்லாரும், அவர்கள் பேசுவதை ஒரு நிமிடம் கேள்!!! என்று கெஞ்சினர்.
அவள் தொடர்ந்து தேம்பி தேம்பி அழுது பிடிவாதம் பிடிக்க வேறு வழியில்லாமல் நாளை அவள் பெற்றோரை வைத்து பேசிக்கொள்ளலாம் என்று தீக்ஷித்தை அவள் வீட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டு வர கூறினார்கள்.
உடனே அதை மறுத்த விஹானா தானே போய்க்கொள்வதாக கூறினாள். அனைவரும் எவ்வளவோ எடுத்து கூறியும் விஹானா பிடிவாதமாக இருந்தாள்.
அப்பொழுது அங்கு தீக்ஷித்தின் பிறந்தநாளிற்கு வந்த அஞ்சலியை பார்த்த விஹானா,
அஞ்சலி! என்னை உன் காரில் ஏற்றிக்கொண்டு போய் என் வீட்டில் விட்டுவிடுகிறாயா? என்று அழுதுக்கொண்டே கேட்டாள்.
அஞ்சலிக்கு இங்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. உடனே இச்சூழ்நிலையை பயன்படுத்தி தீக்ஷித்தை தன் வசம் இழுக்க எண்ணினாள்.
அவள் தீக்ஷித்திடம் நல்லவள் போல் வேடமிட்டு, தான் திருந்திவிட்டதாகவும் தான் அவளுக்கு புரியவைப்பதாகவும் தனியே அழைத்து கூறிவிட்டு தன் பரிசையும் அளித்துவிட்டு விஹானாவை அவள் வீட்டில் விட்டுவிட அழைத்துச்சென்றாள்.
இருவரும் அஞ்சலியின் காரில் கிளம்பினர். தீக்ஷித்தின் வீட்டிலோ எல்லாரும் அதிர்ச்சி, சோகம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்வுகளும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தனர்.
அனைவரும் விஹானாவை எப்பொழுது நம் வீட்டிற்கு அழைத்து வர போகிறாய் என்று தீக்ஷித்தை பார்த்து கேள்வி கேட்க , நாளை நான் நேரில் சென்று அவளின் பெற்றோரை பார்த்து பேசி அவளுக்கு புரியவைத்து அழைத்து வருகிறேன் என்று கூறினான்.
இங்கோ அஞ்சலியும் விஹானாவிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தாள். அவளிடம் அங்கு நடந்தவற்றுள் தான் பார்த்ததை மட்டும் கூறினாள்.
இதனைக் கேட்ட அஞ்சலியோ விஹானா தவறாக தான் புரிந்துகொண்டாள் என்பது அவளுக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது.
ŞİMDİ OKUDUĞUN
என் சுவாசத்தின் மறுஜென்மம்
Romantizmஇறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி த...