விஹானா காலையில் எழுந்து வந்து பார்த்தால் வீடே பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.
காரணம் அந்த பசுமை நகரத்தின் தலைவனின் வருகை !!!அதாவது அவர்களின் முதலாளி.விஹானாவும் அந்த பரபரப்பில் தன்னை நுழைத்துக்கொண்டாள். அவளும் அவளுக்கு தெரிந்த வேலைகளை செய்தாள். நேரம் ஆகஆக அனைவரிடமும் பதற்றம் தொற்றிக்கொண்டது.விஹானாவும் அங்கு சமையலறையில் வேலை செய்யும் அக்காவிடம் அந்த பதற்றத்திற்கான காரணங்களை கேட்டாள்.
அதற்கு அவளோ, முதலாளிக்கு வேலை செய்தால் திருத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார், அப்படி இல்லையெனில் கூப்பிட்டு கண்டிப்பார் சிறு சிறு தவறுகள் கூட அவரது கண்களுக்கு புலப்பட்டுவிடும்.
அதனால் தான் இந்த பரபரப்பு என்று கூறினாள். நேரம் கடக்க கடக்க, அவளிடமும் இந்த பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆகையால் தன் அம்மாவிடம் சென்று, அம்மா! எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது, நான் நம் அறைக்கு சென்றுவிடவா? என்று கேட்டாள்.
சரி நீ போய் ஓய்வெடு ! என்று கூறவும் உடனே சென்று விட்டாள்.
பின்னர் வேகவேகமாக வந்த அவனோ அனைவரையும் பார்த்து ஒரு கண்ணசைத்துவிட்டு அவளை தேடினான். அவளை காணவில்லை என்றாலும் பெரிதாக கவலைக்கொள்ளாமல் இங்கே தானே இருப்பாள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பாட்டியிடம் தான் சென்று ஓய்வெடுக்கப்போவதாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.
அன்றிரவே தீக்ஷித்தின் வீட்டார், இவர்கள் ஊரில் ஷீவ் நாடாரின் புதிய கல்லூரியின் திறப்பு விழாவிற்கு வருவதாக தகவல் கிடைக்கவும் இனி விஹானாவை எப்படி தீக்ஷித்திடம் இருந்து மறைப்பது என்று யோசிக்க துவங்கினான்.சற்று நேரம் யோசித்தவனுக்கு ஒரு யோசனை பிறந்தது. அதை எப்படியாவது செயல்படுத்தவேண்டும் என உறுதிபூண்டான்.
சற்றும் தாமதிக்காமல் உடனே விஹானாவின் அம்மாவையும் அந்த வீட்டின் பராமரிக்கும் பாட்டியையும் சென்று பார்த்தான். அவர்களிடம் விஹானா அவளின் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் அப்பொழுதுதான் அவள் அவளின் சொந்தக்காலில் நிற்கமுடியும் என்று கூற, அதற்கு விஹானாவின் தாயும் சற்று யோசிக்க, எங்கே? தான் தாமதித்தால் அவர் மனம் மாறி விடுவாரோ என்று ஏதேதோ கூறி அவரை சம்மதிக்க வைத்தான்.
ESTÁS LEYENDO
என் சுவாசத்தின் மறுஜென்மம்
Romanceஇறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி த...