10. என் சுவாசத்தின் மறுஜென்மம்

2.2K 170 27
                                    

பயத்தில் கண்மூடிய அஞ்சலியை அதே இடத்தில் விட்டுவிட்டு வந்த தீக்ஷித்திற்கு ஒன்றுமே புரியவில்லை.
அப்படியே யோசித்து கொண்டிருந்தவன் நாட்காட்டியை பார்த்தான். அப்பொழுது இரண்டுநாளில் அவனின் பிறந்தநாள் என்பது நினைவிற்கு வந்தது.
உடனே அன்றைக்கே விஹானாவை அழைத்து உண்மையை கூறிவிடலாம் என்று முடிவுசெய்தான். யாரோ ஒருவர் அவளிடம் கூறி அவளை குழப்புவதைவிட நாமே அவளிடம் நிலைமையை எடுத்துக்கூறி புரியவைக்கலாம் என்று நினைத்தான்.
அதற்கேற்றார் போல அஞ்சலியும் விடுமுறைக்காக வெளியூர் புறப்பட்டாள்.
விஹானாவிடம் தீக்ஷித், இன்னும் இரண்டு நாளில் தன்னுடைய பிறந்தநாள் என்றும் வீட்டில் நண்பர்கள் அனைவருக்கும் விருந்து கொடுப்பதாகவும் கூறி தானே அன்று மாலை அவளை அழைத்துசெல்ல வருவதாகவும் கூறினான்.
விஹானாவும் அவனுக்கு பரிசு கொடுப்பதற்காக தன்னுடைய சேமிப்பில் ஒரு மஞ்சள் நிற சட்டையை வாங்கி அதில் D என்ற எழுத்தை எம்பிராய்டரி செய்து பேக் செய்தாள்.
அவனின் பிறந்தநாள் அன்று காலை செல்லில் அவனை அழைத்து வாழ்த்து கூறினாள்.
அங்கு செல்ல குளித்து முடித்து ஒருமுறை அஞ்சலி வெளியூர் சென்றபொழுது விஹானாவிற்காக வாங்கிவந்த லெஹங்காவை அணிந்தாள். அதில் அவள் பார்க்க வடஇந்திய பெண்போலவே இருந்தாள்.
அவளை அழைத்து செல்ல வந்த தீக்ஷித் அவளை அவ்வுடையில் பார்த்து ஒரு கணம் தன்னையே தொலைத்து நின்றான்.
விஹானா தீக்ஷித்தின் தோளை தொட்டதும் நினைவிற்கு வந்தவன் அவளை வண்டியிலேற சொல்லிவிட்டு காரை எடுத்தான்.
வழிநெடுக்க எப்படி அவளிடம் உண்மையை கூறி தன் காதலை புரியவைப்பது என்று யோசனையில் ஆழ்ந்தான்.
அரைமணி நேரத்தில் வீட்டை அடைந்தவனுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
ஏனெனில் அவனின் வீடு முழுக்க அலங்காரம் செய்யப்பட்டு வீடு முழுக்க ஆட்கள் நிரம்பி வழிந்தனர்.
காலையில் அவன் கிளம்பி சென்றதும் அவனுக்கு இன்பத்திற்ச்சி கொடுக்க அவனின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.அவர்கள் இவன் வருவதற்குள் வீட்டை அலங்கரித்து விருந்தினரையும் அழைத்திருந்தனர்.
வீட்டிற்கு வந்தவன் இவற்றை பார்த்துவிட்டு தான் கூட்டிவந்த விஹானாவை மறந்துவிட்டான். அப்படியே கால்கள் உள்ளே நடக்க, இவனை பார்த்ததும் ஊர்மிளா இவனை கைபிடித்து முன்னே இழுத்து செல்ல எதனையும் கவனிக்காமல் பெற்றோரை பார்த்தபடியே சென்றான்.
அவனின் மனத்திலோ, பேசாமல் தன் பெற்றோரிடம் பேசி விஹானாவிடம் பேச சொன்னால் என்ன? என்று தோன்றியது.
இவன் அதற்காக தன் பெற்றோரிடம் பேச வாய்திறக்க அவனின் பெற்றோரோ எதுவாக இருந்தாலும் கேக் வெட்டிய பிறகு பேசலாம் என்று கூறினர்.
இவனிற்கு அப்பொழுதுதான் விஹானாவை காரிலேயே விட்டுட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.
இங்கே விஹானாவோ வீட்டை பார்த்த மாத்திரத்தில் இவன் பணக்காரன் என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய பணக்காரன் என்று அவள் யோசிக்கவில்லை. இவள் நினைத்தது தீட்சித்தும் அஞ்சலியின் அளவுக்கு வசதி இருக்கும் என்றே நினைத்திருந்தாள்.
இவளை தீக்ஷித்துடன் காரில் வந்திறங்கியதை பார்த்த வேலைக்காரன் அவளை உள்ளே அழைத்து சென்று அங்கு விட்டுவிட்டு விருந்தினரை பார்க்க சென்றான்.
விஹானாவை கூப்பிட விரைந்தவனை அவனின் தாய் தடுத்து நிறுத்தி, எங்கே செல்கிறாய் என்று கேட்க இதோ வருகிறேன் என்று காரை நோக்கி சென்றான்.
அங்கு சென்றதும் இவனை காணாது தேடியவனிடம் அதே வேலைக்காரன் வந்து, அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச்சென்று விட்டதாக கூறினான்.
உடனே அங்கு சென்ற தீக்ஷித் விருந்தினர் நடுவே அவளை தேடினான். அதற்குள் அவனை கேக் வெட்ட அழைத்து சென்றனர். இவனும் கேக் வெட்டியதும் தன் பெற்றோரிடம் பேச வேண்டும் என்று கூறினான். அவர்களும் முதலில் கேக் வெட்டு என்று கூற, இவனும் கேக்கை வெட்டினான். முதல் துண்டை கையிலெடுத்தவன் விஹானாவிற்கு ஊட்ட அவளை தேடினான்.
அவனின் கையிலிருந்த துண்டை ஊர்மிளா வாயில் வாங்கிகொண்டாள். இதனை எதிர்பாராத தீக்ஷித் அவளை முறைக்க, அப்பொழுது அவனின் தந்தை ஊர்மிளாவிற்கும் இவனிற்கும் நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை பற்றி கூறினார்.
அனைவரும் கைதட்டி கரகோஷம் எழுப்ப, இவன் இந்த கல்யாணம் நடக்காது என்று கத்தினான். இதில் அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவன் தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினான்.
அவனை நம்பாத அவனின் பெற்றோர் அவன் வழக்கம் போல் கல்யாணத்தை தவிர்ப்பதற்காக கூறுகிறான் என்று நினைத்து நீ யாரை நினைத்திருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை உனக்கும் ஊர்மிளாவிற்கும் கல்யாணம் நடந்தே தீரும் என்று கூறினர்.
இதனை நான் காதலிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு கூறுங்கள் என்று கூறி விருந்தினர் கூட்டத்தில் ஒருத்தியாய் இருந்த விஹானாவை கைபிடித்து இழுத்துவந்து அவர்கள் முன்பு நிறுத்தினான்.
அவளை பார்த்த அவனின் குடும்பத்தார் அனைவரும் ஆச்சரியத்தில் கூறிய வார்த்தை அபூர்வா என்பதே. அவனின் பெற்றோரால் அவர்கள் கண்ணையே நம்பமுடியவில்லை. பிரதாப்பின் குடும்பமோ இதனை நம்பமுடியாமல் வன்மத்துடன் விஹானாவை பார்த்தனர்.
அவர்களோ விஹானாவை அபூர்வா என்று அழைத்து பேசி அவளை நன்கு உபசரிக்க உள்ளே அழைத்து செல்ல முற்பட்டபொழுது ஜான்வியின் கையை தட்டிவிட்ட விஹானா, தீக்ஷித்தை பார்த்து இங்கே என்ன நடக்கிறது? என்று கேட்டாள்.
நான் உனக்கு எல்லாம் புரியும் படி கூறுகிறேன் என்று கூறினான். அதனை காதில் வாங்காமல் நீங்கள் என்னை காதலிக்கும் நோக்கத்தில் தான் பொய் கூறி என்னுடன் பழகினீர்களா? என்று கேட்டாள்.
நான் உனக்கு புரியும்படி கூறுகிறேன் விஹானா என்று தீக்ஷித் கூற அதனை காதுகொடுத்து கேட்காத விஹானா வெளியே சென்றாள். தீக்ஷித் எவ்வளவோ எடுத்து கூறியும் அதனை கண்டுகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டானே என்ற கோபத்தில் வெளியே செல்ல கேட் நோக்கி முற்பட, தீஷித்தும் பொறுமையிழந்து அவளை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து தோட்டத்தில் உள்ள ரூமில் வைத்து அடைத்தான்.
அங்கே இயற்கை உரத்திற்காக மண்புழுக்களை கண்ணாடி குடுவையில் மண்ணை நிரப்பி தோட்டக்காரன் வாங்கிவந்து விட்டிருந்தான். இவளுக்கு புழுக்கள் என்றாலே மிகவும் பயம். அதனை பார்த்து இவள் காப்பாற்ற solli கத்தி கூச்சலிட, தீக்ஷிதோ வந்திருக்கும் விருந்தினரை பார்த்து கத்துகிறாள் என்று நினைத்து அவளின் வாயில் கையை வைத்து அடைத்தான்.
உடனே தன் தந்தைக்கு அழைத்து வந்திருக்கும் விருந்தினரை ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அனுப்பிவிட்டு தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு காலை கட் செய்துவிட்டு இவனை தள்ள முயற்சித்த விஹானாவின் கைகளை சேர்த்து ஒருகையால் பிடித்தான்.
விஹானாவின் வாயிலிருந்த கையை எடுக்காமலே அவளை பார்த்தான். தீக்ஷித்தை பார்த்து கண்களாலே ஏதோ சைகை செய்தபடி அழுதாள். அவள் தன்னை விடுவிக்கக்கோரியே அழுவதாக நினைத்து விருந்தினர் வெளியே செல்வதற்காக காத்திருந்தான்.

இந்த தொடர்கதை உங்களுக்கு பிடித்துஇருந்தால் தயவு செய்து கீழே இருக்கும் ஸ்டார் ஐ 🌟 அழுத்துங்கள் .

என் சுவாசத்தின் மறுஜென்மம் Opowieści tętniące życiem. Odkryj je teraz