17. என் சுவாசத்தின் மறுஜென்மம்

1.5K 44 25
                                    

அதன் பின்னர் விவானுக்கு அவளை செமஸ்டர்க்கு படிக்க வைப்பதற்குள் பெரும்பாடாயிற்று.

விஹானாவின் அம்மாவிற்கு விவான் ஆரம்பத்திலே ஒரு வாக்கு கொடுத்திருந்தான், அதாவது விஹானா interior designing course ஐ முடித்ததும் அவளுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய அலுவலகத்தில் வேலை கொடுப்பதாக கூறியிருந்தான்.

அதனை நிறைவேற்றுகிறேன் எனக்கூறி அவளை படிக்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.
உண்மையில் அவனுக்கு அவளுடைய அருகாமை பிடித்திருந்தது. அந்த உணர்வு காதல் என்பது அவனுக்கு புரியவில்லை.

அவளோடு இருக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பதாய் உணர்ந்தான்.

காலையிலே அவளை எழுப்பி படிக்க வைக்கிறேன் பேர்வழியென்று பாடாய்படுத்திக் கொண்டிருந்தான்.
அவளுக்கோ தூக்கம் சொக்கும். அரைத்தூக்கத்திலே ப்ரஷில் பேஸ்டை வைத்துக்கொண்டு வெளியில் இருக்கும் ஸ்லாபில் அமர்ந்துகொண்டு தூக்கத்திலே பல்துலக்குவாள்.

அவனுக்கோ அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும். அவள் அப்படி கண்கள் சொக்க பிரஷ் ஐ வைத்து மெதுவாய் தேய்க்கும்பொழுது அவனுக்கு அவளின் குழந்தைத்தனம் மிகவும் அழகாய் தெரிந்தது. அவன் எத்தனையோ மாடல் அழகிகளையும், நடிகைகளையும் பார்த்துள்ளான். ஆனால் அவர்கள் அனைவரும் மேக் அப்பிலே வலம் வருவார்கள். தினசரி வாழ்க்கையிலே நடிப்பவர்கள். அவர்கள் மத்தியில் விஹானா தனியாக தெரிந்தாள்.

அவள் தினசரி செய்யும் சிறு செயல் கூட விவானை ஈர்த்தது.

அவளால் சிறிது நேரம் கூட ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க முடியாது. படிக்க உட்கார்ந்ததும் தூக்கம் வருகிறது முகம் கழுவி வருகிறேன் என்று சென்று விடுவாள். அரைமணிநேரம் கழித்தே வருவாள். சிறிது நேரத்திலேயே கொஞ்சம் பசிக்கிறது ஏதாவது சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு செல்வாள். மிகவும் நேரம் கழித்தே வருவாள் அதுவும் கையில் சிப்ஸ் பாக்கெட்டோ அல்லது பிஸ்கட் பாக்கெட்டோ இருக்கும் சிறிது நேரம் அதை கொரித்துக்கொண்டே இருப்பாள்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now