1

3K 63 78
                                    

அ.....அய்யோ..என்னை விடு டா என்னை விடு ,நீ என்னை கொன்னுட்டா மட்டும் என் புருஷன் உன்னை சும்மா விட்ருவாங்க நினைச்சியா ??காக்கி சட்டை மாட்டுன சிங்கம் டா அவரு...

ஹாஹா ...என்னடி போலிஸ்காரன் பொண்டாட்டி னு அவ்வளவு திமிரா உனக்கு ம்ம்ம் ஆமா உன் புருஷன் உசுரோட இருந்தா தானே உன்னை வந்து காப்பாற்ற முடியும் ,அவனும் என் பிடிலதான் இருக்கான் முடிஞ்சா நீ அவனை காப்பாத்திக்க....

எ....ஏய் என்ன டா சொல்ற அவரை விட்டுடா பாவி. அவருக்கு எதாவது ஆச்சு சும்மா விடமாட்டேன் என்று அவள் கத்திக்கொண்டு வலதுபக்கம் திரும்ப அங்கு அவளது கணவன் இன்ஸ்பெக்டர் ஆரவ் அங்கு கயிற்றில் தலைகீழாக தொங்க விடபட்டுள்ளான். அதைபார்த்து அவளது மனம் துடிக்க...அவனருகே செல்ல முற்பட்டபோது தான் அவளை வெட்டினான் பயில்வான் பாண்டி. அந்த ஏரியாவில் இருக்கும் பெரிய தாதா இவன் தான் .தனக்கு சாதகமாக இல்லாத போலிஸ்காரர்களை கொன்று குவிக்கும் கல்நெஞ்சகாரன்.
🌸🌸🌸🌸🌸🌸
நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் மனைவியை வெட்டிய அந்த பயில்வான் பாண்டியை கையும் களவுமாக பிடிக்க தனிபடை அமைத்து அதை தலைமை தாங்கியபடி நடத்தி வந்தான் ஆரவ். அன்னைக்கு தன் மனைவி குறுக்கே வராவிட்டால் தன்னுடைய உயிர் போயிருக்கும்..அவளை வெட்டியபோது ரத்தம் அவன் கண்களில் தெளிக்க மயக்கத்தில் இருந்தவன் விழித்துக்கொள்ள அங்கு அவனது மனைவி லதா ரத்தவெள்ளத்தில் இருப்பதை கண்டு கட்டிஅணைத்து கதறினான் எப்படியோ அந்த பயில்வான் பாண்டியிடமிருந்து சண்டையிட்டு தப்பித்து வந்தான். ஆம் ஆனால் எப்படியாவது பாண்டியையும் அவனது கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்க வேண்டும் என்று வைராகியம் வைத்தான். லதா இறந்தபின் அவளுடைய ஒரு வயது மகன் ஆரவ்வுடன் இருந்தது அவனை பராமரிக்க ஒரு ஆயம்மா நியமித்து சம்பளம் கொடுக்கப்பட்டது. லதாவை காதலித்து திருமணம் செய்ததால் இருவீட்டாரிடமும் ஒட்டு உறவு இல்லை. எனவே அவர்களது உதவி இவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

ஆரவ்வை கமிஷனர் அழைத்து பேசினார் "இங்க பாருங்க ஆரவ் ,இது உங்க தனிப்பட்ட கேஸ் மட்டும் இல்லை இந்த மாதிரி நிறைய கேஸ் இந்த பாண்டி பெயர்ல இருக்கு. அவனை பிடிக்க ஒரு பெண் போலிஸ் அதிகாரி s.p திவ்யா அவர்களும் உங்களோடு சேர்ந்து பணியாற்ற போராங்க . இந்த கேஸ் பற்றின எல்லா விவரங்களும் அவங்களுக்கு சொல்லியிருக்கேன். நாளைக்கு உங்களை சந்திக்கனும் னு சொல்லியிருக்காங்க ஆனால் ஸ்டேஷன்ல இல்லை அவங்களோட வீட்டில. அதனால நீங்க அவங்களை போய் சந்திச்சிட்டு எனக்கு போன் பன்னுங்க.

ஓகே சார்.

ம்ம்ம் ஆரவ் உங்கள்ட ஒன்னு கேக்கனும் உங்கள் மனைவி லதா இறந்த அன்னைக்கு நீங்க எப்படி பாண்டி கிட்ட மாட்டுனிங்க ???

சார் அவனை அரஸ்ட் பன்னனும் நோக்கத்தில் தான் போனேன்,நான் வரேனு தெரிஞ்சு என் மனைவியை தூக்கிருக்கான்.அப்பறம் நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே.

ஓகே ஓகே நாளைக்கு மறக்காமல் திவ்யா வை பார்த்துட்டு வாங்க . அவங்க எஸ்.பி அதனால கொஞ்சம் பார்த்து பேசுங்க .

சரிங்க சார் நான் கிளம்புறன் என்று விடைபெற்று கொண்டு வீட்டுக்கு வர அங்கு அவனுடைய மகன் நித்தேஷ் அந்த ஆயமாவிடம் விளையாடிக்கொண்டிருந்தான். குழந்தையின் முகத்தை பார்த்தவுடன் எல்லா களைப்பும் போனது அவனை வாரி அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். "சரிங்க ஐயா நான் கிளம்புறன்... அப்புறம் நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்கல??😊

சொல்லுங்க மா.

நீங்க காலம் முழுக்க இப்படியே இருக்கமுடியாது இன்னொரு கல்யாணம் பன்னிட்டா நல்லாருக்கும். கொஞ்சம் யோசித்து பாருங்க . குழந்தைக்கு இன்னும் பால்வாசனை கூட போகலை காலம் முழுக்க தாய்பாசம் இல்லாமல் அவனால எப்படி இருக்கமுடியும்???☺️அப்ப நான் கிளம்புறன் ஐயா. என்று அவள் கிளம்ப அவன் தன் மனைவி லதாவின் போட்டோவை பார்த்தான் ,அந்த சுகமான நாட்களை நினைவு கூர்ந்தான்.

சந்திப்போம்.

ஆரவ்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon