2

182 8 4
                                    

ஹய் ஹய்ய்..பக் பக்...
"இந்தாப்பா.. நீ கேட்ட இடம் வந்துவிட்டது, இறங்கிக்கொள். அதோ இருக்கிறது பார் வேட்டுவர் சத்திரம்"

மாட்டு வண்டிக்காரன் காட்டிய திசையை நோக்கினான் அந்த இளம் பிராயத்தினன் தன் தலை பாகையை சரிசெய்து கொண்டு.

"வந்தனம் அண்ணே உங்க உதவிக்கு" என்றுவிட்டு அந்த சத்திரத்தை நோக்கி செல்லலானான். நடுஜாம வேலை நெருங்கி கொண்டு இருந்ததால் அந்த இடமே அமைதி சூழ்ந்து இருந்தது. இவன் உள்ளே செல்ல எத்தனித்த நேரம்

"யாருப்பா நீ"

சத்திர காவலன் குரல் கொடுத்தான்.

"அண்ணே நான் வெளியூர்காரன், பக்கத்து ஊருக்கு என் மாமாவ பாக்க போறேன், நேரம் ஆகிருச்சு பயண அசதியா இருக்கு. இங்க தங்க இடம் கொடுத்தீங்கனா காலைல நடைய கட்டிருவேன்"

" ஓ சரி, தங்கிக்க பா. ஆமா உன் பேர் என்ன? எந்த நாட்டவன் நீ "

"கு.. குமரன் அண்ணே, சோழ நாட்டான் தான்" எதையோ சொல்ல வாயெடுத்து மாற்றியது போல் அவன் விழிக்க காவலன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு

" பக்கத்தில் எந்த ஊரு உன் மாமா? என்ன விஷயமாக அங்கு செல்கிறாய்?"

"காவிரிபட்டணம் அண்ணே. அவருக்கு உடல்நிலை சரி இல்லைன்னு செய்தி வந்துச்சு. அதான் பாக்க போறேன்"

"சரி பா, அங்க இடம் இருக்கு பாரு. அங்க போய் படுத்துக்க" என்று ஒரு மூலையை காட்டினான்.

" நன்றிண்ணே " அவன் காட்டிய இடத்தில் தன் பையை தலையணையாக வைத்து படுத்து கொண்டான்.

'நம் வாயே வினையாகிரும் போலவே. நான் வந்த காரியம் முடியும் வரை சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நமக்கு தேவையான செய்திய எப்படி திரட்டுவது? அருகில் உள்ளவர்கள் உறக்கத்தில் உள்ளார்களே' என்று எண்ணியபடியே இருந்தான் இவன்.

எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமலே நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தான் குமரன். அவன் உறக்கத்தில் இருப்பதை கண்ணுற்ற இரண்டு உருவங்கள்

" இவன் தானா நீ சொன்ன இளைஞன்?"

" ஆமா ஐயா. இவன் வந்த நேரமும் சரி இல்லை தந்த பதிலும் திருப்தியானதாக இல்லை. இவன் பேரில் எனக்கு சந்தேகமாக உள்ளது "

" இவன் முகலட்சணம் பார்த்தால் சந்தேகிப்பது போல் இல்லையே,சரி இருந்தாலும் இவன் மீது இங்கு உள்ள வரை கண் இருக்கட்டும் "

" உத்தரவு ஐயா "

அவர்கள் நகர்ந்த நொடி விழி திறந்து அவர்கள் செல்வதை கண்டான் குமரன். போகும் நபரை கண்டவன் 'பழம் நழுவி பாலில் விழந்துவிட்டது இனி இவரை எவ்வாறு அணுகுவது? என்ற சிந்தனையில் மீண்டும் உறங்கி போனான் அவன்.



காத்திருந்த விழிகள்Where stories live. Discover now