5

173 9 4
                                    

அமைதியாக தயாரான குழலி மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரும் வேளை பவ்யமாக அமர்ந்து இருந்தாள். பூங்குழலியின் தந்தை சித்திரவாணர் கடைவீதியில் மரச்சாமான்கள் கடை வைத்து நடத்தி வந்தார். வியாபார பழக்கமாக அத்தியண்ணணுடன் ஏற்பட்ட நட்பின் எதிரொலி தான் இந்த பெண் பார்க்கும் படலம்.

அத்தியண்ணண் புகழ்பெற்ற செல்வாக்குடைய வணிக வியாபாரி, அயல்தேசங்களுக்கு கடல் கடந்து வாணிபம் செய்பவர். இந்த பொருளென்று இல்லாமல் வாசனை திரவியங்கள், தேன், பட்டு துணிகள், பழவகைகள் போன்று பலவகை பொருட்களை மக்களின் தேவைக்கு ஏற்ப விற்று பொருள் ஈட்டுபவர். சில தேசங்களில் சோழ அரசின் பிரதிநிதியாகவும் செயலாற்றுபவர். இவருடைய பிள்ளையே அரவரசன். தந்தைக்கு உதவியாக அவருடன் இணைந்து தொழில் புரிந்து வந்தான்.

சபையில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் கலந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுகையில் நம் நாயகி அவள் உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்தாள். மாப்பிள்ளையின் பால் கடைகண் பார்வைகூட வீசினாள் இல்லை. ஆனால் மற்றவர்கள் பார்வையோ இவளிடமே இருந்தது குறிப்பாக அரவரசனின் கவனம் இவளை சுற்றியே இருந்தது.

குழலியிடம் மாப்பிள்ளையின் தாயும் தமக்கையும் சம்பாஷனையில் ஈடுபட இவளோ முற்றத்தில் வழியும் மழைநீரை கண்ணுற்றபடி இருந்தாள். சில முறை கூப்பிட்டும் அவள் கவனம் அதிலேயே இருக்க 

" குழலி.. ஏ குழலி உன்னை தான் கேட்கிறார்கள் காதில் விழுந்ததா" அவள் அன்னை அதட்ட

" ஹான் என்ன கேட்டீர்கள்? " திரும்பி அவர்களை கேட்க, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள்ளே முணுமுணுத்தபடி சென்று அமர்ந்துவிட்டனர்.

முதலில் பெண்களுக்கே உரித்தான நாணம் என்று மற்றவர் எண்ண பின்னரோ அவளின் ஒட்டுதலில்லா பாவனைகளும் ஆர்வமில்லா பதில்களும் அவர்களை நெற்றி சுருக்க வைத்தது, இதனால் குழலியின் தாயும் தந்தையும் ஒருவித பதற்றத்துடனே காணப்பட்டனர்.

அத்தியண்ணண் சித்திரவாணரிடம் ஒன்றும் இயம்பாது விடைபெற மற்றவரும் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அரவரசனோ குழலியை ஒருவித ஏக்கத்துடன் நோக்கியவாரே சென்றான்.

" என்ன பழக்கம் இது? இதுதான் உனக்கு நான் கற்று தந்த ஒழுக்கமா? வந்தவர்களை இப்படி அவமான படுத்தலாமா? பெண் பிள்ளைக்கு அழகா இது?" சித்திரவாணர் குழலியை நைய புடைத்தார்

இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற போக்கில் அமர்ந்து இருந்தாள் பூங்குழலி. அவள் தந்தை சொன்ன சொற்கள் எல்லாம் களிமண் தரையில் பட்டு தெரிக்கும் மழை நீராய் சிதறியது.

அவள் தாயும் தன் பங்கிற்கு வைய, மெது மெதுவே அவ்விடத்திலிருந்து மறைந்நாள் குழலி.

"செல்வி எங்கே குழலி?"

"குளக்கரை பூங்காவனத்திற்கு சென்றிருப்பாள் அவள் தோழிகளை காண"

"இவள் இப்படியே போனால் எப்படித்தான் இவளை ஒருவனிடம் ஒப்படைப்பது? இன்னும் சிறுபிள்ளையாய் விளையாட்டு போக்குடன் இருக்கிறாள்"

"தாங்கள் கவலை கொள்ளாதீர்கள் எல்லாம் புகுந்த வீட்டிற்கு சென்றாள் தானாக சரியாகி விடுவாள், உங்கள் நண்பர் கோபித்து கொண்டு இருக்க போகிறார். அவரை கண்டு சமாதானம் கூறுங்கள்"

"ஆம் அவரை நாளை கண்டு பேச வேண்டும். இந்த திருமண பேச்சு நல்லபடியே முடிய வேண்டும்"

அதே வேளை குளக்கரை ஓரமாக இருந்த பூங்காவனத்தில் பூப்பந்து விளையாடியபடி குழலியும் வனமயிலும் கலகலத்தனர்.

"என்னடி என்னவாயிற்று பெண் பார்க்கும் படலம்? "

"ஆயிற்று ஆயிற்று. மிக சிறப்பாக ஆயிற்று" என்று கூறி சிரித்தாள் குழலி

"என்னடி சொல்கிறாய்? சம்பந்தம் முடிந்ததா?" ஆர்வமாக கேட்டாள் மயில்

"அடிபோடி. எனக்கு அனல் மேல் நிற்பது போலவே இருந்தது, பட்டும் படாமலும் நடந்து கொண்டேன். வந்தவர்கள் கோபித்து கொண்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டனர்"

"அது சரி. எந்த காளை உனக்கு மூக்கனாங்கயிறு கட்ட போகிறானோ தெரியவில்லை" என்று சிரித்தாள் வனமயில்

"என் பெண் திமிரை அடக்க ஒருவன் இல்லாமலா போய் விடுவான்? "

அவள் சொல்லி முடிக்கவும் அவள் மேல் ஒரு கயிறு விழவும் சரியாக இருந்தது.

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 23, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

காத்திருந்த விழிகள்Where stories live. Discover now