"அம்மா நான் படித்துறைக்கு சென்று நீராடிவிட்டு வருகிறேன் "
"அடியே நேற்று தானே அவ்வளவு எடுத்துறைத்தேன். எல்லாம் மறந்து விட்டதா? " குழலியிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார் செல்வி
"என் தோழிகளோடு சென்றுவிட்டு சீக்கிரம் வந்துவிடுவேன் அம்மா. அவர்கள் பகல் பொழுதில் அல்லவா வருகிறார்கள்,பின் உன் கவலை தான் என்ன?" அவர் தோளில் கை போட்டு வினவினாள் குழலி.
"உன் தந்தைக்கு யாரடி பதிலுரைப்பது? உன்னை இன்று எங்கும் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து சென்றுள்ளார்"
" அவருக்கு தெரிந்தால் தானே அம்மா, நீ எப்போதும் போல் சமாளிக்க மாட்டாயா என்ன?" என்று கண்சிமிட்டியவள், அவர் பதிலுக்கு காத்திராமல் சிட்டென பறந்தாள்.
" ஏ குழலி எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது வா வா விரைந்து செல்வோம், சூரியன் உதிப்பதற்கு முன் திரும்பாவிட்டால் என் பாட்டி என்னை வறுத்து எடுத்து விடுவார்" புலம்பி கொண்டே இவள் கை பற்றி இழுத்து சென்றாள் தோழியான வனமயில்
" சீக்கிரம் சென்றாள் மட்டும் உன் பாட்டி வசைமாரி பொழிய மாட்டார்களா என்ன?" என பரிகசித்து சிரித்தாள் குழலி
" ஹ்ம் போதும் போடி என் பாட்டி கதை. அங்கு நம் தோழிகள் காத்திருப்பார்கள் வா"
" நான் வருவேன் என்று உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை வராவிட்டால் என்ன செய்து இருப்பாய்"
" உன்னை பற்றி தெரியாதா என்ன? அடம்பிடித்தோ இல்லை உன் அம்மாவை கொஞ்சியோ காரியம் சாதிப்பவள் ஆயிற்றே. எப்படியும் வருவாய் என்று தெரிந்துதான் காத்திருந்தேன் "
படித்துறையை அடைந்து மற்ற தோழியரோடு நீராடினர் இருவரும்.
"ஏனடி உன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்களாமே? மாப்பிள்ளை எந்த
தேசமாம்? பெரிய இடமோ?" வம்பளக்க கேட்டாள் வாசுகி" ஏதோ வணிகம் செய்வதாக கேள்வியுற்றேன். மற்ற விவரம் ஒன்றும் தெரியாது"
" அப்பொழுது நல்ல சீர் தந்து உன்னை மணமுடிப்பார்கள் என்று சொல்" என்றாள் எழிலி
சுர்ரென்று கோபம் ஏற "எனக்கு இதில் ஒன்றும் சம்மதம் இல்லை. பண்டமாற்று பொருளாக போக நான் என்ன உயிரற்ற ஜடமா?"
"ஏனடி உனக்கு இவ்வளவு கோபம், வழக்கமாக நடைபெறும் முறை தானே இது" என்றாள் வனமயில்
" அவளுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை. சும்மா நம்மிடம் அப்படி அலக்கிறாள், வணிக குடும்பத்தில் வாழ்க்கைபட கசக்குமா என்ன? என்று சீண்டினாள் வாசுகி
" எனக்கு வரும் மணாளனை நானே தேர்ந்தெடுப்பேன். வீரத்தில் வல்லவனாக என்னை கவர வேண்டும், வீர போட்டியில் வெற்றி பெற்று என்னை கைப்பற்ற வேண்டும்" என கண்கள் மின்ன சொன்னாள் குழலி
"ஆசை தான். இன்று அந்த வழக்கம் அரச குடும்பத்தில் மட்டும் அல்லவா உள்ளது. நம்மை போல் குடிமக்களிடம் ஏது அந்த முறை?" என வினவினாள் வனமயில்
" இவளுக்கு மட்டும் இளவரசன் பரி ஏறி வந்து இவளை கவர்ந்து செல்வானாக்கும்" என பரிகாசாமாக சிரித்தாள் வாசுகி. மற்ற தோழியரும் இணைந்து எள்ளி நகையாட சின மிகுதியில் குழலி
" நான் விரும்பிய வழியில் தான் என் வாழ்க்கையை அமைத்து கொள்வேன். இது என் சபதம், பொறுத்து இருந்து பாருங்கள் " என விர்ரென்று கிளம்பி சென்றாள் குழலி
" ஏ இருடி நானும் வருகிறேன்" அவளை தொடர்ந்து ஓடினாள் வனமயில்
இவர்கள் உரையாடலை ஒரு ஜீவன் குரோதத்துடன் அங்கு இருந்த மரத்திற்கு பின் அமர்ந்து கேட்டதை இவர்கள் ஒருவரும் அறியவில்லை.
YOU ARE READING
காத்திருந்த விழிகள்
Historical Fictionநிகழ்காலத்தின் அழகு இறந்த காலமாகும் போது புலப்படும் காதலில் பிரிவும் சுகம் தரும் இன்ப தருணங்களை நினைத்துக்கொண்டே கூடலை எதிர்நோக்கையில்... (இங்கு கதிரவனை எதிர்நோக்கும் ஒரு கமலம்... திங்களை காண துடிக்கும் ஞாயிறு)