சூரியன் சாளரத்தின் வழியே குமரனை எழுப்ப, சிறிது நேரம் இமைகளை பிரிக்க போராடியவன் ஒரு வழியாக எழுந்து அமர்ந்து தான் எங்கிருக்கிறோம் என ஆராய்ந்தான். சுற்றம் புரிய தன் உடை தலைபாகையை சரி செய்து கொண்டு கண்களை மேய விட்டான்.
" என்ன தம்பி நல்ல தூக்கமா? உணவு கிடங்கை மூடும் நேரம் ஆகிவிட்டது. நீ சென்று சீக்கிரம் தயாராகி வந்தால் தான் உனக்கு காலை உணவு கிட்டும்"
சத்திர காவலன் இங்ஙனம் கூற "இங்கு தயாராக இடம் உள்ளதா?"
"அருகில் ஆற்றுப்படுக்கை உள்ளது. அங்கு தான் சென்று வர வேண்டும்"
ஒரு நிமிடம் எதையோ தீவிரமாக யோசித்தவன் சரியென்று தலையசைத்து புறப்பட்டான் அங்கு.
"தம்பி ...... ... .... " காவலன் ஏதோ சொல்ல கேட்கும் தூரத்தில் அவன் இல்லை, கேட்டு இருந்தால் பின் வந்த சிக்கலை தவிர்த்து இருக்கலாம்.
ஆற்றை அடைந்தவன் அங்கு இருந்த சோலைக்கு பின் குளிக்க இறங்கினான். அவன் கால் வைத்த நொடி வீல் என்ற சத்தத்தில் பதறி இவன் நோக்க, அங்கு ஒரு இளம்பெண் பாதி நீரில் தன் உடலை மறைத்த வண்ணம் இவனை அச்சத்தோடு பார்த்தாள். அவள் எதனால் கூச்சலிட்டாள் என இவன் சுற்றி தேட அதற்குள்ளாக சில பெண்கள் சத்தம் கேட்டு அங்கு கூடினர்.
"ஏ யார் நீ, இங்கு என்ன வேலை உனக்கு?" என்று ஒரு பணிப்பெண் வினவ மற்ற சிலர் அந்த பெண்ணை நெருங்கி ஆடை உடுத்த உதவினர்.
" நான் வெளியூர், அருகில் உள்ள சத்திரத்தில் தங்கி உள்ளேன். நீராடுவதற்காக இங்கு வந்தேன், ஏன் என்ன பிரச்சினை?"
"இது அரச குடும்பத்து பெண்கள் நீராடும் இடம். ஆண்கள் வர அனுமதி இல்லை. உனக்கு இது தெரியாதா?"
முகம் சிவக்க "ஆண்களா.. ஓ.. மன்னிக்க வேண்டும். எனக்கு இது தெரியாது" அவளிடமும் மன்னிப்பு கேட்க திரும்ப மற்ற பெண்கள் சூழ இருந்தவள் இவன்புறம் திரும்பாமல் அரண்மனை நோக்கி சென்று விட்டாள். அவள் சென்ற திசையை இவன் காண, அதே வேளை அங்கு நான்கு காவலர்கள் இவனை சூழ்ந்து கொண்டனர்.
YOU ARE READING
காத்திருந்த விழிகள்
Historical Fictionநிகழ்காலத்தின் அழகு இறந்த காலமாகும் போது புலப்படும் காதலில் பிரிவும் சுகம் தரும் இன்ப தருணங்களை நினைத்துக்கொண்டே கூடலை எதிர்நோக்கையில்... (இங்கு கதிரவனை எதிர்நோக்கும் ஒரு கமலம்... திங்களை காண துடிக்கும் ஞாயிறு)