பகுதி - 5

2.5K 114 7
                                    

பேருந்து மெதுவாக சென்று கொண்டிருக்க, கண்மணி தன் யோசனையில் ஆழ்ந்திருக்க, அங்கு வந்த நடத்துனரை கவனிக்கவில்லை.

தினேஷிற்கு பயணச்சீட்டு அளித்துவிட்டு கண்மணியை இருமுறை நடத்துனர் அழைக்க...
கவனம் கலையாத கண்மணியை கலைத்தது நடத்துனரின் வசவு...

"ஏன்மா டிக்கெட் எடுத்துட்டு தூங்குமா... கண்ண தொறந்தே தூங்குது பாரு" என்று கொட்டிக் தீர்க்க... சிரிப்பை அடக்கிய தினேஷையும், தன் எண்ண ஓட்டத்தை அடக்கிய நடத்துனரையும் முறைத்தவாறே பயணச்சீட்டு பெற்றாள்.

சில மணி துளிகள் கடந்த பிறகு, தினேஷ் கண் அயர ஆயத்தமானான்!

இமை மூடி தலை சாய்ந்திருந்த அவன் முகத்தை சில நொடி கண்ட கண்மணி, முறுவலுடன் கைப்பையை துழாவினாள்!
கிடைத்த தன் பேனா காகிதம் கொண்டு எழுதத் தொடங்கினாள்!

"புரியாத புதிரோடு ஓர் பயணம்!
பயண முடிவில் புதிருக்கான விடை பெறுவேனோ?
அன்றி விடை அறியாமல் விடை பெறுவேனோ?"

அவளிடம் உள்ள அழகான ஓர் பழக்கம் இது!!!
அதிகம் யோசிக்கும் போது மனதில் தோன்றும் உணர்ச்சிகளை சொல்லில் வடிப்பதுண்டு!

தாயிடம் வசவு, தந்தையிடம் கொள்ளும் பற்றுதல், தோழி வான்மதியுடனான தருணங்கள், கண்டு வியக்கும் காட்சிகள் இவற்றுள் எட்டப்பனும் எட்டிப் பார்த்தது அவளறியா விந்தை!!!

கைப்பையுள் தன் கிறுக்கலை புகுத்தி விட்டு, பாடல் கேட்க தொடங்கினாள் இமை மூடியபடி...

பேருந்து சிறிது நேரம் பயணிகள் தேநீர் குடிக்கவென நிறுத்தப்பட்டது ஒன்பது மணி வாக்கில்.

"நான் டீ குடிக்க போறேன். வரீங்களா?"  என தினேக்ஷ் கேட்க.. இல்லை என்று அவள் கூறிவிட, அவன் கீழிறங்கினான்...வாலட் விழுந்ததை கவனியாமல்!

அதை கண்ட கண்மணி, வாலட்டை கையில் எடுக்க குனிந்த போது அவள் கண்ணில் பட்ட புகைப்படம்! ஒரு பெண்ணுடன் தினேக்ஷ் நிற்பது தான் அந்த படம்.

"லவ் ஃபெயிலியர் இல்லைன்னு சொன்னார்... யாரா இருக்கும்..." என்று யோசித்தவாறு ஜன்னல் வழியாக அவனை அழைத்து வாலட்டை அளித்தாள்.

இங்கே ஆதிநாராயணன் வீட்டில், தினேக்ஷின் தம்பி திலீப் பேருந்தில் நடந்ததை தங்கை ஸ்ருதியிடம் கூறி நகைத்துக் கொண்டிருந்தான்.

"தீப்... உனக்கெப்பிடி அவங்க தான் அண்ணனுக்கு பாத்த பொன்னுன்னு தெரியும்?" என்று ஸ்ருதி வினவ

"நான் போட்டோல பாத்தேன்... அம்மா அண்ணாகிட்ட காட்டும் போது.. க்ஷி இஸ் ஸோ ஃபன்னி... எட்டப்பன்னு அண்ணன் சொன்னப்போ என்னால சிரிப்பு அடக்க முடியல" என்று கூறி இருவரும் நகைத்தனர்.

இருவரின் சிரிப்பையும் ரசித்து மகிழ்ந்தனர் பெற்றோர் இருவரும், இந்த மகிழ்ச்சி தங்கள் குடும்பத்தில் நிலைக்க வேண்டியபடி.

பேருந்தில் இருந்த கண்மணி.. தன் முக புத்தகத்தின் வாயிலாக தினேஷைப் பற்றி தேடத் தொடங்க... மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றாள்.

காரணம், அவன் வேலை பார்க்கும் இடத்தில் தான் தோழி வான்மதியும் பணி புரிகிறாள்.

"அட ஆமா...அப்பா சொன்னாரே கம்பெனி பத்தி... நாம தான் கவனிக்கல... கூப்பிட்றா அந்த ஐந்நூத்தி ஒன்ன" என்று தன் தோழி வான்மதியை அழைத்தாள்... பதினோரு மணி என்றும் பாராமல்.

தன்னை பற்றியை ஆராய்ச்சி நடப்பதை அறியாமல் தினேஷ் கண்ணயர்ந்திருந்தான்.

மனம் போல் மணம்Where stories live. Discover now