பகுதி - 13

2.5K 125 13
                                    

தினேஷ் கண்மணியைக் காண அவள் அலுவலகம் சென்றான்.
மணி 4.30 என்று காட்டியது.‌ அவள் பணி முடியும் நேரம் ஆறு என்று அறிந்தும் பொருட்படுத்தாமல் அவள் கைபேசி எண்ணை தொடர்பு கொண்டான்.

அனிதாவிற்கு பணி நிமித்தம் சில சந்தேகங்களை தீர்த்து கொண்டிருந்த கண்மணியின் கைபேசி, "விருப்பம் பாதி தயக்கம் பாதியில்... கரையில் ஒரு கால்... கடலில் ஒரு கால்" என்று இனிதாய் பாட..

திரையில் "தீனா காலிங்" என மின்ன, அனிதா சிரித்தபடி கால் அட்டெண்ட் செய்ய சைகை காட்ட... விரைந்து எடுத்தவள்.. "ஹலோ... ஹாய்... சொல்லுங்க..." என்றாள்.

(தீனா.. தினேஷ் என்பதன் பெயர் சுருக்கம்)

தினேஷ், "நீ ஃப்ரியா இருந்தா கோவில் போய்ட்டு வரலாமா? இப்போ?" என்று அழைக்க

கண்மணி, "இப்போ...வா..." என்றபடி அனிதாவைப் பார்க்க

அனிதா தன் சிரிப்பை அடக்கியபடி சென்று வருமாறு சைகை செய்ய... தன் கைப்பையை  எடுத்துக் கொண்டு அவனுடன் பேசியபடி எழுந்து செல்ல..

அனிதா தன் சீட்டிற்கு சென்று அமரும் போது அவள் கைபேசி அலறியது "சுக்ஷ் காலிங்" என்று

கால் அட்டெண்ட் செய்து அனிதா, "சொல்லு சுஷ்!... என்ன... கோவிலுக்கா.. சரி.. வரேன்..." என்று பேசிவிட்டு அவளும் கோவில் செல்ல ஆயத்தம் ஆனாள்.

தினேஷ் அருகில் வந்த கண்மணி, "ஹாய்... என்ன‌ திடீர்னு கோவிலுக்கு?" என்று கேட்க

தினேஷ், "சும்மா.. போகனும்ன்னு தோணுச்சு... போலாமா" என்று பைக்கை உதைத்து தயாராக..

கண்மணி வண்டியில் அமர்ந்தாள். முதல் பயணம்... அவனோடு அவன் பைக்கில்... இனம்புரியாத உணர்வொன்று ஆட்கொள்ள இனிதே அப்பயணம்  தொடர்ந்தது.

போகும் வழியில் தினேஷ், "ஆமா... திலீப் என் ஃப்ரெண்ட பற்றி சொன்னப்போ நீ நம்பலயாமே??" என்றான்.

மனம் போல் மணம்Where stories live. Discover now