வரம் 1

15.7K 268 15
                                    


"கெளதம் அதுக்குள்ள ஜாகிங் கிளம்பிட்டியாப்பா"?  .... என்றார் கௌதம் அப்பா பிரபாகரன்

"ஆமாப்பா நீங்களும் வரீங்களா?  சேர்ந்தே போவோம் "என்றான் கௌதம் சித்தார்த்.

"எதுக்கு உன்னோட வந்தேனா ... இவ்வளவு நாள்,  நான் கஷ்டபட்டு பிரண்ட் புடிச்சி வெச்சவங்களாம் இன்னியோட நீயாச்சி உன் சவகாசமச்சின்னு விட்டுட்டு போய்டுவாங்க "பரவாலையா  என்றார்..

"அப்படி யாரை  நீங்க பிரண்ட்  பிடிச்சி வெச்சிருக்கீங்க? ... உங்கமேல எனக்கு டவுட்டா இருக்கே, இருங்க எதுக்கும் அம்மா கிட்ட ஒரு வார்த்தை  சொல்லி வைக்கறேன் உங்க புருஷனை  கொஞ்சம் கவனிங்கனு என்னப்பா சொல்லவா"??? என்றான்.

"அடப்பாவி வீட்டுக்கு வெளியதான் நீ இவ்வளவு நாள் போலீசா இருந்த இப்போ வீட்டுக்குள்ளையுமா ..... போதும்டா மவனே நீ நல்லா அப்பாவுக்கு செய்யற ... இந்த 58 வயசுல என்ன கோர்ட் படிய மிதிக்க வெச்சிருவ போலவே"... என்றார்  பிரபாகரன்

நீங்க அங்க எல்லாம்  போக வேண்டாம்ப்பா செல்விகிட்ட சொன்னா  இங்கையே எந்த செலவுமே இல்லாம சூப்பரா 10 நிமிசத்துல டைவர்ஸ் குடுத்துடுவாங்க ... எனப்பா சொல்லவா"???

"டேய் மகனே,  போதும்டா இன்னிக்கு நீ ஒரு முடிவோடதான்  இருக்கனு தெரியுது.. கம்னு போனவனை கேள்வி கேட்டதுக்கு நல்லா செய்யறடா, .. இதுக்கு பேருதான் சும்மா இருந்த  சனியனை பனியன்ல தூக்கி போடுகிறதா? "..... என்றார்.

"அப்போ என்னை  சனியன்னு சொல்லிறிங்க அப்படிதானே"....

"ஐயோ சாமி இன்னிக்கு என் நாக்குலதான் சனி "என்று சிரித்தார்

கௌதமும் சேர்ந்து சிரித்து விட்டு ஜாகிங் கிளம்பினான்...

போற மகனையே கண் குளிர பார்த்து நின்றார் பிரபாகரன் .

"போதும் உங்க மகனை சைடு அடிச்சது,  புடிங்க காப்பிய,  குடிங்க முதல்ல அப்புறம் பார்க்கலாம் உங்க மகனை" என்றார் செல்வி

கௌதம் 28 வயது வாலிபன் . 6 அடிக்கு மேல் உயரம் கம்பீரமான தோற்றம் அசிஸ்டன்ட் கமிஷனராக இருப்பவன்... வீட்டில் அப்பா அம்மாவிற்கு மகனாக மட்டும் இருக்கும் கௌதம் .. வெளியே அப்படியே அதற்கு எதிராக கடுமையாகவும் , பாறை போன்ற  இறுகிய  முகத்துடனும், பார்ப்பவர்களை கொஞ்சம் தள்ளியே நிற்க வைப்பான்.

கெளதம்  போலீஸ் வேலையை உயிராக நேசிப்பவன். அதனால் இந்த சின்ன வயசுலயே AC யாக இருக்கிறான்... தப்பு செய்பவர்களுக்கு இவன் கொடுக்கும் தண்டனை வேற விதமாக இருக்கும்  அதனால்  ஊரில் உள்ள ரவுடிகள் எல்லாம் அலறுவார்கள்.
 

ஜாகிங் முடித்துவிட்டு வந்தவன் செல்வி கொடுத்த காபியை குடித்து  விட்டு மேலே  தனது ரூமிற்கு சென்று ரெடியாகி வந்தான்...

அவனை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்த பெற்றோர்கள் இருவரும் மனநிறைவோடு பார்த்தனர்...

"சாப்பிட்டு போப்பா" என்றார் செல்வி

"இல்லம்மா இன்னிக்கு நேரமா போகணும் நான் அங்கையே போய் சாப்பிட்டுக்கறேன்,  வரேன் "என்றவன் வேகமாக கிளம்பினான்...

💞வரமாக   வந்தவளோ  💞Where stories live. Discover now