♥️வரம் 55♥️

3.1K 149 36
                                    

பிரியாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய.... என்னாச்சி பிரியா.... உடம்புக்கு எதும் இல்லைல .. என்றவனை பின்னால் இருந்து அணைத்தாள் பிரியா...

"பிரியா என்ன பண்ற"? .....

"உன்னை கட்டிபுடிச்சிருக்கேன்...... பார்த்தா தெரியலையா"???

பிரியாவிற்கு நினைவு வந்துவிட்டது போல என்று நினைத்தவன் .... எதற்கும் செக் பண்ணி பார்க்கலாம் என்று " குட்டி" என்றான்

"என்ன சித்து? என்ன பார்த்தா, உனக்கு குட்டியா இருக்கமாதிரி தெரியுதா? .... இல்லை.... என்னை கிண்டல் பண்றியா சித்து? "..

"அது நான் ஏதோ நியாபகத்துல அப்படி கூப்பிட்டுடேன்... அதைவிடு எதுக்கு இப்படி என்னை கட்டிபிடிச்சிருக்க....முதல கையை எடு".... என்றான் அவளுக்கு நினைவு வரவில்லை என்ற கோவத்தில்

அவன் கோவம் பிரியாவிற்கு பயத்தை குடுக்கவில்லை.... மாறாக சிரிப்பை குடுத்தது.... மெதுவாக சிரித்தவளை பார்த்தவன்....

"எதுக்குடி இப்போ சிரிக்கிற? " என்றான்...

அவள் பதில் சொல்லவருவதற்குள் நர்ஸ் வந்துவிட... அவர்களிடம் சொல்லி கட்டை பிரிக்க சொல்லிவிட்டு போன் எடுத்துகொண்டு வெளியே போக இருந்தவனை கையை பிடித்தாள் பிரியா...

"சித்து என்னோடவே இரு.... எனக்கு பயமா இருக்கு.... என்று கெஞ்சும் கண்களோடு பார்த்தவளின் தலையை வருடி குடுத்தான்...

"காயம் நல்லாவே ஆறி இருக்கு இருந்தாலும், இன்னும் 2நாளைக்கு தலைக்கு குளிக்க வேண்டாம்... இந்த ஆயில்மென்ட் போடுங்க, சீக்கிரம் சரி ஆகிடும்" என்று சொல்லிவிட்டு காயத்திற்கு சிறிய ப்ளாஸ்த்ரை போட்டுவிட்டு சென்றார் நர்ஸ்

அவர்கள் போகும்வரை அமைதியாக இருந்த பிரியா.... மறுபடியும் அவள் வேலையை காட்ட ஆரம்பித்தாள்...

கெளதம் சமைக்கும் போதும் ஏதாவது வேலை செய்யும் போதும், அவன் பின்னாடி இருந்து கட்டி பிடிப்பது அவன் எதிர்பார்க்காத நேரம் பார்த்து கன்னத்தில் முத்தம் குடுப்பது என்று அவனை தொல்லை பண்ணிகொண்டிருந்தாள்...

💞வரமாக   வந்தவளோ  💞Tempat cerita menjadi hidup. Temukan sekarang