வரம் 8

3.4K 179 2
                                    

பிரியா புறப்படும் இந்த ட்ரெயினில்,  பல ரகசியங்களும் அவளுடன்  சேர்ந்து பயணம் செய்தது.... இரவு அனைவரும் தூங்கி விட்டனர்,  செல்வா மட்டும் தூங்காமல் அவர்களை பாதுகாக்க எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் அனைவரும் உறங்கினர்....

நடு இரவில் பாத்ரூம் செல்வதற்காக பிரியா எந்திரிக்கவும்,  செல்வா உக்காந்து கொண்டே தூங்குவதை கண்டவள்,  அவனை மெதுவாக படுக்க வைத்து விட்டு அவனிற்கு போர்வையை போர்த்தி விட்டாள்,

தனியாக எங்கும் போக கூடாது, என செல்வா பிரியாவை மிகவும் கண்டித்திருந்தான் .... அவர்கள் 4 பேருமே பிரியாவை காவல் காப்பது போல கொஞ்ச காலமாகவே பிரியாவிற்கு தோன்ற ஆரம்பித்தது.

"என்னவாக இருக்கும் இல்ல எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா "???? சரி அத அப்புறம் யோசிக்கலாம் இப்போ ரெஸ்ட்ரூம் போய்ட்டு வருவோம் என்றவள் பூனை நடை நடந்து மெதுவாக போனாள்.

ரெஸ்ட் ரூம்க்கு சென்றுவிட்டு தனது கம்பார்ட்மெண்டிற்கு திரும்ப இருந்தவளின் பின்புறம் ஏதோ சத்தம் கேக்க,  திரும்பியவளின் கழுத்தை உரசி சென்றது ஒரு கத்தி .. பிரியா பயத்தில்  விழிபிதுங்கி நின்றுவிட்டாள், ஒருவன் அவளை நோக்கி கத்தியுடன் வந்தான் ... அவன் கிட்ட நெருங்க, நெருங்க பிரியாவின் கண்கள் பயத்தில் ஜொலித்தது ... கிட்ட வந்தவன் பிரியாவின் தலை முடியை பிடித்து கொள்ள,  மற்றொருவன் அவளை குத்த கத்தியை எடுத்தான். "அவ்வளவுதான் நம்மளோட செப்டெர் கிளோஸ்" என்று நினைத்த பிரியா கண்களை இறுக மூடி கொண்டாள் . அவளுக்கு பயத்தில் கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது, இதில் அவனிடம் இருந்து திமிர வேண்டும், கத்தி அனைவரையும் எழுப்ப வேண்டும் என்று  தோன்றவே இல்லை,

கண் இமைக்கும் நொடியில் பிரியாவின் எதிரில் இருந்தவன் யாரோ ஒருவனின் தாக்கியதால்   கீழே விழுந்தான் ... பிரியாவின் முடியை பிடித்திருந்தவனை இன்னொருவன்  போட்டு நொங்கு எடுத்துகொண்டிருந்தான் , கொல்லவந்தவர்களை  அந்த இருவரும் உயிர் போகும் அளவுக்கு அடி வெளுத்துவாங்கி விட்டனர்  ... சத்தம் கேட்டு அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த அனைவரும் எழுந்துவிட்டனர்... ஆனால் செல்வாவை தவிர மற்ற மூவரும் தூங்கிகொண்டிருந்தனர்

💞வரமாக   வந்தவளோ  💞Where stories live. Discover now