வரம் 7

4K 184 7
                                    

"ஹேய் பிரியா இன்னிக்கு வைவா இருக்குடி, நீ இவ்வளவு  கூலா இருக்க,  உன்னால மட்டும்தான் இப்படி இருக்க முடியும்.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடி" என்றாள் அனிதா

"அடியே எருமைமாடு நம்ம 6 மாசம் இங்க வந்து எவ்வளவு கஷ்ட பட்டோம், 
அதுக்கு காரணம் எங்க அப்பாதான் .. நீ ப்ராஜெக்ட் பண்ணா மும்பைல தான் பண்ணனும் சொன்னாரு,  என்னோட கனவு அது அப்படி இப்படினு கதை விட்டு இங்க அனுப்பி வெச்சாரு .. சரி மும்பை போய்யாவது நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்,  நினைச்சி நிம்மதியா மூச்சிவிடல,  மும்பை போனா  உங்ககூடத்தான் போகணும்னு சொல்லி என்னோட தலைல இடிய இறக்கிட்டு அவரு பாட்டுக்கு   போய்ட்டாரு "

எனக்கு தானே தெரியும், உங்க கூட இந்த 10 வருசமா  எவ்வளவு  கஷ்டப்படறேனு .. என்ன எங்கையாவது தனியா அனுப்பிருக்கிங்களா அதும் அந்த செல்வா எருமையும், குகன் எருமையும் சொல்லவே வேண்டாம்,  கம் போட்டு ஒட்டாத குறைதான் 2 எருமையும் என் பின்னாடி பாடிகாட் மாதிரி வரான்ங்க.. சுப்பா முடியல என்னால ... ஒரு பிரைவசியே  இல்லை "என்று பெருமூச்சி விட்டவளை

"இதில் இருந்து தாங்கள் சொல்ல வருவது யாதோ" என்றாள் தமிழ்

"நானே எப்போடா இங்க இருந்து போவோம்னு ப்ராஜெக்டை சீக்கிரம் முடிச்சிருக்கேன் .. இதுல பயம் ஒன்னுதான் குறைச்சல் .. சும்மா பெனாத்தம வாயை மூடிட்டு இருடினு தான் சொல்லவரேன்  என்றாள்

"ஆமா பெரிய இவ, இவ. போடி மங்குஸ் மண்டச்சி உன்ன தனியா விடலையாம் ... தனியா விட்டாதான் நீ பிரச்சனைய கூடவே கூட்டிடு சவந்தரியே  அப்புறம் எப்படி தனியா விடுவாங்க "??? என்றாள் அனிதா

"அப்படி என்னடி நான் தனியா போன உங்களுக்கு பிரச்சனை வருது?? ஒன்னு சொல்லு டி பாக்கலாம் "

"என்னவா??? ஒன்னு இல்லடி ஓராயிரம் சொல்லலாம்... உன்ன பிடிச்சிருக்குனு ஒருத்தன் வந்து சொன்னா .. எனக்கு பிடிக்கல , பிடிச்சிருக்கு இப்படி ஏதாவது ஒன்னு சொல்லணும் அத விட்டுட்டு அவன் மண்டைய உடைச்சிட்டு,  அத நீதான் உடைச்சேன் வேற போய் பிரின்சிபால் கிட்ட சொன்னில, அப்போ குகனும் , செல்வாவும் எவ்வளவு எடுத்து சொல்லி உனக்காக கெஞ்சி உன்ன சஸ்பெண்ட் பண்ணாம இருக்கறதுக்கு போராடுனாங்க," என்றாள் அனிதா .

💞வரமாக   வந்தவளோ  💞Donde viven las historias. Descúbrelo ahora