அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார்.
"உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது.
அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை பௌர்ணமி நிலவாக ஜொலிக்க வைப்பான். அவனுக்காக இவள் இரவாக மாறி அவனை நிலவாக ஜொலிக்க வைப்பாள்" என்று கூறி விட்டு அங்கு இருந்து மறைந்தார்.சில வருடங்களிற்குப் பின் மீண்டும் அதே சித்தர் ஒருவனை அழைத்து,
"உன்னவள் உன் கையில் கிடப்பாள். நீ இடும் திலகமும், உன் மூச்சும் அவள் உயிர் காக்கும்"என்று கூற
ஏளனமாக புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றான் அவன்.
"உன்னவள் உன்னிடம் வருவாள், உன்னாலே அந்த குருவிக் கூடும் கலையப் போகிறது. எல்லாம் இறைவன் செயல்" என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் அந்த சித்தர்.
![](https://img.wattpad.com/cover/203332226-288-k904056.jpg)
YOU ARE READING
இரவாக நீ நிலவாக நான் (முடிவுற்றது)
Romanceஎன்னோட இரண்டாவது கதை..... உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன். பெண்.... உலகில் மிக அற்புதமான படைப்பு.. அவள் வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவள் பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள். திருமணமானவள் என்றால் கணவனுக்காக வாழகின்றனர்....... அப்போது அ...