பூ - 1

2.7K 38 3
                                    

அன்று ஞாயிற்றுக்கிழமை. வாரத்தின் முதல் நாளே என்றாலும் ஆறு நாட்களும் கல்லூரி சென்று வந்த அவளுக்கு அதுவே கடைசி நாளாக இருந்து . அவளுடைய அறையில் பகல் பத்து மணி ஆனது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்தாள் மோனு.

அவளுடைய அப்பா கதிரவன் . அவள் அம்மா கவிதாவுக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தார்.

"இருபத்திரண்டு வயதாகுது.... எப்பதான் ஞாயிற்றுக்கிழமை சீக்கிரம் எழ கத்துக்க போராளோ... இன்னும் தூக்கிட்டு இருக்கா.... ஏய் மோனு எழுந்திருக்க போரியா இல்லையா..." என்றார்.

" டு மினிட்ஸ் கவிமா... வர்ரோன்ன்ன்ன்....... " என்று மீண்டும் தூங்கினாள்.

"மா இப்ப அக்காவ ஏன் எழுப்ரீங்க அவ தூங்கட்டும்" என்றான் மோனுவின் தம்பி யோகேஷ் என்ற யோகி .

" அதானே தூங்கட்டும் என் பொண்ணு" என்று மகளுக்குப் பரிந்து பேசினார் கதிர்.

"இப்படி இரண்டு பேரும் அவளுக்குசெல்லம் குடுங்க.... போர வீட்டில் என்ன பன்னுவீங்க" என்றார் கவிமா.

"அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம், இப்ப அக்காக்கு பிடித்த இந்த மீனை சமைங்க" என்று மீனை நீட்டினான் யோகி.

" இப்படித்தான் இருக்கனும் தம்பினா.... "என்று வெளியே வந்தாள் மோனு.

"இந்தா டீ...சூடா இருக்கு.. பாத்து குடி..."என்றார் கவிமா

" இப்ப நீங்க மட்டும் என்ன பண்றீங்கலாம்...அக்காக்கு ஏன் டீ கொண்டு வந்திங்க.. லேட்டாதானே எழுந்தது..." என்று வம்பிழுத்தான் யோகி.

எப்போதுமே அவர்கள் அப்படித்தான்... வீட்டிற்கு முதல் பிள்ளை அதுவும் பெண் பிள்ளையாக இருப்பினும் அவள் அந்த வீட்டின் செல்லப்பிள்ளை தான்.

குணசேகரன் நேர்மையான தொழில் அதிபர். அவருக்கென அவருடைய சொந்த உழைப்பில் உருவாக்கிய ஐந்து கம்பெனிகள் இருந்தது. அவர் மனைவி மகாலட்சுமி. அவர்களுக்கு இரு புதல்வர்கள் அஸ்வின் , வைணவன் மற்றும் ஒரு புதல்வி அபிநந்தினி.

மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....Where stories live. Discover now