பூ - 30

77 8 5
                                    

மண்டப வெளியில் இருந்த தோட்டத்தில் நின்று நிலவை பார்த்து கொண்டிருந்தார்....  ரவீந்திரன்...  அவரருகில் வந்த சிவா அவரின் தோல் தொட திரும்பினார்...

சிவா: பா... என்ன ஆச்சு ஏன் இப்டி இருக்கீங்க...

ரவி: ஒன்னும் இல்லைடா... உன்னோட அம்மாவை பத்தி தான் நினச்சு கிட்டு இருக்கேன்... என்றவறை முறைத்தான் சிவா...

ரவி: டேய் உடனே நீ முறைக்காத... நம்மல விட்டு போகும் பொது நீங்க யாரும் இல்லாம இருப்பிங்கன்னு... சொன்னா.... ஆனா இவுங்க எல்லாரும் என் கூட இருந்தாங்க... ஆனாலும் நா கவலை பட்டதே உன்ன பத்தி தான் உன்னோட கல்யாணம் எப்டி நடக்குமோன்னு நா நினைக்காத நாள் இல்லை... இன்னைக்கு அது இவ்வளவு நல்லா நடக்கும் போது அவ கிட்டநா போட்ட சவால்ல ஜெயிச்சிட்டேன் டா... உன்னோட கல்யாணத்தை நிறைவா இவுங்க எல்லாரும் பண்ணிடுவாங்க.... இதை எல்லாம் பாக்கும் போது என்னோட கல்யாணத்துக்காக என்னோட தங்கச்சி என்னவெல்லாம் பண்ணுனான்னு தான் ஞாபகம் வருது..... அவ அவ்வுளவு பண்ணி எங்களோட வாழ்க்கையில கொண்டு வந்தா ஆனா... அவளாலையே என்னோட தங்கச்சி வாழ்க்கை.... என வருத்த பட....

சிவா: என்னது தங்கச்சியா....???? எனக்கு தெரியாம யார் அந்த தங்கச்சி....???

ரவி: அ... அத.... அதை விடு... நாளைக்கு உன்னோட கல்யாணம்.... எப்பையும் சந்தோசம் இருக்கணும்.... அதுதான் என்னோட ஆசை.... விருப்பம்... எல்லாமே...

அஸ்வின்: என்ன ரவிப்பா... அப்பாவும் மகனும் என்ன பேசுறீங்க... நானும் மாப்பிள்ளை தான் சோ எனக்கும் ஏதாச்சும் சொல்லனும்னா சொல்லலாம்.... எல்லாம் உங்க செல்ல பையனுக்கு மட்டும் தானா....

ரவி: எப்பவும் எங்களோட செல்லம் அஸ்வின் நீ... எங்க எல்லாருக்கும் உன்னைனா ரொம்ப பிடிக்கும் எங்களோட முதல் குழந்தை டா.... எப்பவும் நீ சந்தோசமா இருக்கணும்... அப்போது அங்கு வந்தானர் குணா சுந்தரம் கதிர் மற்றும் அருணாச்சலம்...

அருணா: ஆமா அஸ்வின் நீ பிறந்து போது உன்ன முதல் முதல கைல வாங்கினதுமே என் கைல தான் தந்தா.... இந்தாங்க அண்ணா உன்னோட மருமகண்ணு.... அப்போ நா ஏதோ ஒரு உறவு முறை வச்சு சொல்லுறான்னு நினைச்சேன் ஆனா இப்போ அது உண்மை ஆகிடுச்சு....

மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....Tahanan ng mga kuwento. Tumuklas ngayon