பூ - 18

261 15 1
                                    

மோனுவும் குனாவும் பைல்களை பார்த்து கொண்டிருக்க...

"மாமா... இது என்ன பைல்.... ???"

"இது s.l.g கம்பனி பைல்... இன்னும் டீல் ஃபைனல் பண்ணலமா.... புதுசா இப்பதான் நமக்கு அறிமுகம் ஆனாங்க..."

''நா இதை பாக்கலாமா... ???"

"இதுல என்னடா இருக்கு... பாரு..."

"ம்ம்ம்ம்ம்... ஓகே மாமா" என மிக ஆர்வமாக எடுத்து பார்த்து கொண்டிருக்க வீட்டிற்குள் நுழைந்தாள் பூஜா.... (கார்த்தியின் தங்கை)

"ஹாய் மாமா... எப்படி இருக்கீங்க... அத்தை எங்க..." என்ற படி உள்ளே நுழைய மோனுவை அங்கு பார்க்கவும்... "நீ இங்க என்ன பண்ணுற....??'' என்றாள் கோவமாக....

"நா.... இங்க..." என மோனு கூற வருவதற்குள் குணா...
"அது பூஜா மோணு வீட்டுல யாரும் இல்லை... ஊருக்கு போய் இருக்காங்க... சோ கொஞ்ச நாள் இங்க இருக்கட்டுமேனு கூட்டிட்டு வந்தோம்.... "

"ஏன் மாமா... கண்டவுங்களை எல்லாம் உள்ள விட்டு கிட்டு இருக்கீங்க..." என்று அவள் வாயிற்குள்ளையே... கூற
மோனு அங்கிருந்து மேலே சென்றாள்....

"என்ன பூஜா இப்படி பேசுற... நாளைக்கு ஒரு இடத்தில வாழ போற பொண்ணு நீ இப்படி பேசலாமா..." என குணா கேட்க...

"இல்ல மாமா... அதுவந்து..." என இழுக்க... அங்கு மகா வந்தார்.

"நா ஆபீஸ் ரூம் போறேன்... கொஞ்சம் வேலை இருக்கு" என மேலே சென்றார்.... ஏனோ அவருக்கு மோனுவை பற்றி பூஜா கூறியது பிடிக்கவில்லை...

"வா பூஜா எப்ப வந்த... " என்றார் மகா

"இப்பதான் அத்தை... உங்களுக்கு நா நெறைய வாங்கிட்டு வந்துருக்கேன்..." என தனது பையை எடுத்து வருமாறு வேலை ஆளிடம் கூற அவரும் சென்றார்.

"மோனு ஏன்டா இங்க வந்துட்ட..." என்றார் குணா...

"ஒன்னும் இல்லை மாமா...."

"பூஜா அப்படி....." என அவர் தயங்க...

"பூஜாக்கு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது... கதிர் அப்பா என்னோட பையோலஜிக்கள் அப்பா இல்லைனு தெரிஞ்சதுக்கு அப்பறம் என்கிட்ட அவளுக்கு பேசவே பிடிக்கலை... அதுதான் அங்க இருந்து அவளை கஷ்ட படுத்துறதை விட... இங்க வரலாம்னு வந்துட்டேன்... "

மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....Where stories live. Discover now