💙23💙

2.4K 115 15
                                    

ஒரு மாதத்திற்கு பின்...!

அழகான இளம் குளிர் மாலை பொழுதிலே அரங்கேறிக்கொண்டு இருந்தது அந்த மகிழ்வான நிகழ்வு. வெண்ணிற அரண்மனை போல் நிமிர்ந்து நின்ற அந்த மண்டபத்தின் உள்ளே... சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாக அமைந்திருந்தது அந்த மேடை.

அதன் சுவற்றிலே... 'அர்ஜுன் ஆதித்யா வெட்ஸ் தாரிகா (தாரா)' என்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

ஆம்!!! இன்று அர்ஜுன் மற்றும் தாராவின் திருமண ரிசப்ஷன்.

மேடையின் முன்பு போட்டிருந்த வெள்ளை நிற இருக்கையின் மேல் அடர்ந்த நீலமும், கருப்பும் கலந்தது போன்ற நிறத்தில் கோட் சூட் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

'என்ன தாராவ இன்னும் காணோம்?' என்று தன் கைக்கடிகாரத்தை அவன் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்... ரம்யா, பிரியா மற்றும் அவள் தோழிகள் நந்தினி, ஸ்டெல்லா ஆகியோருடன் மேடையேறினாள் தாரா.

அடர் நீல நிறத்தில் தங்க நிற கற்கள் மற்றும் ஜரிகை வைத்து, அழகாக வடிவமைக்கப்பட்ட
லெஹெங்கா புடவை அணிந்து... தேவதையாய் மேடை ஏறியவளைக்கண்டு மெய்மறந்து எழுந்து நின்றான் அர்ஜுன். அவனின் அருகே தலைக்குனிந்த வண்ணம் வந்து நின்றாள் தாரா. இருவரும் சேர்ந்து ஜோடியாக அனைவருக்கும் வணக்கம் வைத்தார்கள்.

"பார்ரா! அதிசயமா அடக்கமா நிக்கிற தாரா. பொண்ணுக்கு கல்யாண கலை வந்துருச்சு போல." என்று நகைத்தான் அர்ஜுன்.

"வாய மூடு அர்ஜுன். எல்லாரும் பார்க்கிறாங்களே'ன்னு அமைதியா இருக்கேன். இல்லேனா..." என்று பல்லைக்கடித்து சிரித்துக்கொண்டே சொன்னாள் தாரா.

"அச்சோ! பொண்டாட்டி சொன்னா கேட்கணும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. சோ, நான் அமைதியா இருக்கேன்." என்று வாய் மீதி கை வைத்து சைகை செய்தான் அர்ஜுன்.

"ஷூ!!! முடியல" என்று கண்களை உருட்டினாள் தாரா.

பிறகு விழாவுக்கு வந்திருந்த ஒவ்வொருவராக மேடை ஏறி மணமக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தனர்.

காதலும் கடந்து போகும்💘Où les histoires vivent. Découvrez maintenant