அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"மாங்கல்யம் தந்துனானேனா
மமா ஜீவன ஹெட்டுனா
கந்தே பாட்னமிஸுபகே
த்வாம் ஜீவ ஷரட சதாம்" திரு மாங்கல்யத்தை புரோகிதர் கிருஷ்ணாவின் கையில் கொடுத்தார். மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அதை தன் கையில் பெற்றுக் கொண்டான். அவன் அருகில் தேவதையாய் அமர்ந்திருக்கும் அவன் காதலியின் முகத்தை பார்த்தான்.இறுதியில் அவர்கள் காதலில் வெற்றிப் பெற்று திருமண மேடையில் அவள் தனக்கு மனைவி ஆகப் போகும் சந்தோசத்தை அவன் மனம் அவனுக்கு உணர்த்தியது. மனதில் நிறைந்திருந்த காதலுடன் அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.
அந்த ஈரமான மஞ்சள் கயிறு அவள் கழுத்தில் ஏறியக் கணம் அவள் உடலெங்கும் சிலிர்த்தது, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. கண்களில் கனவோடு அவள் கணவனை பார்த்தாள். இருவரது பார்வையும் சந்தித்துக் கொண்ட அந்த தருணம் இருவரும் இந்த மண்ணில் வாழும் நாட்கள் முழுவதும் மறவாமல் இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு.
அதே நினைவுகளுடன் கண்களை திறந்தாள். அவன் முகத்தை நினைத்தவள் முகத்தில் புன்னகை தானாக பரவியது. கண்களை திறந்து நிகழ்காலத்தை உணர்ந்தவள் முகத்தில் இருந்த சந்தோச புன்னகை ஒரு வேதனை சிரிப்பாக மாறியது.
நடந்ததை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மனதை ஓரளவு சமாதானம் செய்து கொண்டாள். படுக்கையை விட்டு எழுந்தவள், பல்துலக்கி குளித்து விட்டு, சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
ஒரு குவளையில் ஜூனியர் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் அங்கே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அவள் குழந்தையின் முகம் பார்த்து நின்றாள். அவள் வாழ்விற்கு அர்த்தம் சொல்ல வந்த அவளின் மகளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.
நேரம் ஆவதை உணர்ந்து அவள் அருகில் சென்று அவளை எழுப்பினாள். "எழுந்திரு பட்டு! ஸ்கூலுக்கு டைம் ஆச்சு" அவள் கன்னத்தில் முத்தமிட்டு கூற, குழந்தை அவள் அழகிய கண்களை திறந்தாள்.
எழுந்ததும், "அம்மா!" என்று ஆசையாக அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் குழந்தை. அவள் கொண்டு வந்திருந்த ஹார்லிக்ஸை குடிக்க வைத்து அவளை பள்ளிக்கு செல்ல தயாராக்கினாள்.
அவள் அன்பு மகளுக்காக அவள் வாழ்க்கையில் நடந்த பல கசப்பான தருணங்களை மறந்து இயல்பாக வாழ்ந்து கொண்டு இருந்தாள் மீரா.
வணக்கம் நண்பர்களே!
இது நான் ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதி முடித்த நாவல். இதை தமிழிலும் எழுதணும்னு ஆச பட்டு, ஒரு முயற்சி பண்ணி இருக்கேன். என்னோட முதல் நாவலுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இதுக்கும் குடுத்து எனக்கு சப்போட் பண்ணுங்க. உங்களுடைய கருத்துகளை பகிரவும்.
தோழி ஆர்த்தி😊
YOU ARE READING
என் உறவானவனே
Romanceஅந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இர...