அத்தியாயம் 10

3.8K 121 13
                                    

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

சென்னை,

"அத்த! நீங்களும் இங்கேயே தங்கி இருக்களாம்ல. கண்டிப்பா அங்க போய் தான் ஆகணுமா?" ராஜேஸ்வரியின் உடைமைகளை அவர் பையில் எடுத்து வைத்து கொண்டு அவரிடம் சோகமாக வினவினாள் மீரா. "ஆமா மீரா. உன்னுடைய மாமாவுக்கு ஹைட்ரபாத்ல தான் முக்கியமான வேலை இருக்கு. நாங்க ரெண்டு பேரும் அங்க இருந்தா தான் அந்த பிஸ்னஸ்ஸ நல்லபடியா பாத்துக்க முடியும். கிருஷ்ணா இப்போ தான் இங்கே அவன் பிஸ்னஸ்ஸ தொடங்கி இருக்கான்.

நீ அவன் கூட இருந்து அவனுக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட் பண்ணு. நாங்க ஒண்ணும் ரொம்ப தூரத்தில இல்ல, எப்போ உங்களை பாக்கணும்னு தோணுதோ அப்போவே வந்திருவோம். அதனால எங்கள பத்தி கவலைப் படாமல் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க" அவள் முகத்தை கையில் ஏந்தியவாறு கூறினார்.

"சரி அத்த" மீரா புன்னகையுடன் தலை அசைத்தாள். "பேச்சுக்காக நீ என் பொண்ணுன்னு சொல்லல மனசார தான் உன்ன என் பொண்ணுன்னு சொன்னேன். அதனால இனி நீ என்ன அம்மானே கூப்பிடலாம். சரியா?" அவர் கேட்க, "சரி மா!" என்றாள் புன்னகையுடன்.

விஸ்வநாதன் ஒரு வாரம் முன்பே கிளம்பி இருக்க, ராஜி மீராவின் ஆசைக்காக ஒரு வாரம் அவர்களுடன் இருந்து விட்டு அன்று கிளம்பினார். "அம்மா கிளம்பலாமா?" கிருஷ்ணா கேட்க, அவரும் அவர்களுடன் கிளம்பினார். மீராவும் கிருஷ்ணாவும் அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

"கிருஷ்ணா! நாம எங்க போறோம்?" அவர்கள் இல்லத்திற்கு போகும் வழி இல்லாமல் வேறு பாதையில் அவன் வண்டியை ஓட்டி செல்ல, மீரா அவனை வினவினாள். "ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம். அது என்ன இடம்னு அங்க போனதும் நீ தெரிஞ்சுக்குவ" அவன் சிறு புன்னகையுடன் அவள் முகம் பார்த்து கூற, மீராவுக்கு ஆர்வமாக இருந்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தனர். அந்த அழகிய இல்லத்தை பார்த்து அவள் விழிகள் விரிந்தன. "உள்ள வா" என்று கூறி அவளின் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்றான்.

என் உறவானவனேWhere stories live. Discover now