அத்தியாயம் - 1

7.9K 181 20
                                    

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில், பல பரபரப்பான வீதிகளை காணலாம். அவற்றில் எம்.ஜி. ரோடும் ஒன்று. அதிகாலை முதலே போக்குவரத்து அதிகரிக்க தொடங்கி விடும். பாதசாரிகள், கடைக்காரர்கள் மற்றும் வேலைக்கு புறப்பட்டு செல்லும் மக்களின் கூட்டங்கள் கடைகளுக்கு வெளியே நடைபாதைகளில் நடந்து செல்வது; சாலையைக் கடக்க முயற்சிப்பது என அந்த இடம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

அதிலும் அதிகமானவர்கள் பெண்களே. கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அந்த போக்குவரத்து நெரிசலில் சாலையை கடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தனர். இருந்த போதும் அவர்கள் முகத்தில் எந்த சோர்வும் இருக்காது. பெண்கள் மனவலிமை ஆனவர்கள் என்பதை உணர்த்துவது போல் இருக்கும் அந்த காட்சி. அது ஒருபுறம் இருக்க,

இன்னொரு புறம் பலவிதமான ஜவுளி கடைகள், தரைவிரிப்பு கடைகள், உணவகங்கள், நகை கடைகள், மின் பொருட்கள் கடைகள், ஆடை ஆபரணங்கள், பொம்மைகள் மற்றும் அலுமினிய சமையல் பாத்திர கடைகள் என மக்களை கவரும் வகையில் பல கடைகளை அமைத்து வாடிக்கையாளர்களை சேர்க்க வியாபாரிகள் பல யுக்திகளை கையாண்டு கொண்டு இருந்தனர்.

அதே தெருவில் ஒருபுறம் அமைந்திருந்தது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு. எந்த வித இடையூறும் இன்றி மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த குடியிருப்பு.

பன்னிரெண்டாம் மாடியின் பால்கனியில் நின்று இவை அனைத்தையும் ஒரு வித ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் மீரா. அந்த அதிகாலையிலேயே வாழ்க்கையை நடத்த ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், அந்த பரபரப்பான சாலை அனைத்தும் பல செய்திகளை அவளுக்கு உணர்த்தியது.

அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பொழுது அவள் கைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு அவள் அறைக்குள் நுழைந்தாள்.

"ஹலோ ஆரவ்" அவள் புன்னகையுடன் பேச தொடங்கினாள். "ஹலோ மீரா! எல்லாம் ஓகே தானே. இவ்வளவு காலைல ஃபோன் பண்ணி இருந்தே. அப்புறம் ஐ அம் சாரி, நான் ஒரு மீட்டிங்ல இருந்தேன் அதான் ஃபோன் அட்டெண்ட் பண்ண முடியல" அவன் மன்னிப்பு கேட்க, "பரவா இல்ல ஆரவ், நான் இன்னிக்கு ஆபீஸ் வர முடியாது. அர்ஜென்ட் ஆனா வேலைகளை நான் வீட்ல இருந்தே செஞ்சு முடிச்சிடுறேன். அதுல எந்த பிரச்சனையும் இல்லையே?" மீரா அவனிடம் அனுமதி கேட்டாள்.

என் உறவானவனேحيث تعيش القصص. اكتشف الآن