வலையில சிக்காத மீனைப்போல
வலஞ்சு திணுசா தான்
நீயும் போகுறியே..உன்முட்டமுட்டக் கண்ண வச்சு
தீனியா தான் என்னையும்
தின்னும் தின்னாம திங்கிறியே..கண்ணம்மா..
என் மீனம்மா..
--------------------
நான் தீர்ந்துதான் போனேன்டி
உன்னால..
ஒரு தீர்வத சொல்லாம போறது
ஏன்கண்ணே..
தீவுக்குள்ள உள்ள குளத்துக்குள்ள
தீனிபோல் நானும் மாட்டிகிட்டேன்..
உன்னால..
என்ன தின்னாம போறது
ஏன்கண்ணே..
திண்ணமத சொல்லிட்டுதான்
போகண்ணே..
________________பொரியதில் சிக்காத மானை போல
பொறி கலங்கத்தான்
நீயும் வக்கிறியே..உன் கவரிமான் நடையை வச்சு
கவர்ந்து தான் என்னையும்
கண்டும் காணாம காண்கிறியே..கண்ணம்மா..
என் மானம்மா..
--------------------
நான் காணாம தான் போனேன்டி
உன்னால..
ஒரு காட்சியத காட்டாம போறது
ஏன்கண்ணே..
காட்டுக்குள்ள உள்ள மரத்துக்குள்ள
பசையைபோல் நானும் ஒட்டிகிட்டேன்..
என்ன காண்காம போறது
ஏன்கண்ணே..
காதலத சொல்லிட்டுதான்
போகண்ணே..
________________மழையில பாக்காத மயில போல
மருண்டு மறைஞ்சு தான்
நீயும் போகுறியே..உன்நெட்ட நெட்ட கழுத்த வச்சு
ஆடத்தான் என்னையும்
ஆடியும் ஆட்டாம ஆட்டுறியே..கண்ணம்மா..
என் மயிலம்மா..
--------------------
நான் மடங்கிதான் போனேன்டி
உன்னால..
ஒரு மனசத மறுக்காம போறது
ஏன்கண்ணே..
மழைக்குள்ள உள்ள மடலுக்குள்ள
மணத்தை போல நானும் மாட்டிகிட்டேன்..
உன்னால..
என்ன மணக்காம போறது
ஏன்கண்ணே..
மனமத சொல்லிட்டுதான்
போகண்ணே..© CG Kumaran
BẠN ĐANG ĐỌC
அவனின் கவிதைகள்..
Thơ caதுணைவியை எதிர்நோக்கும் துணைவன் ஒருவனின் காத்திருக்கும் காலமதன் தாக்கத்தின் எண்ணங்கள்.. எண்ணம்தனின் வழிவந்த வார்த்தைகள் அதன் கோர்வைகள்..