அருவியாக.. அவள்..

2 0 0
                                    

அருவியதன் அழகை
காண..
ஆனைமலை பக்கம்
போகயில..
ஆனையத தான்
காணலயே..
அருவியத தான்
நான் பார்த்து..
அசந்து போய்
தான் நின்னேனே..

அம்மாடி..
அப்படியே நின்னேனே..

அழகான மயிலொன்னு
அது அங்கஇங்க
ஆடுதம்மா..

அது ஆடும் ஆட்டத்துக்கு
அருவியும் தான்
அடங்கி போகுதம்மா..

ஆகாசம் மேலிருந்து
அருவியது கொட்டயில..
அது கொட்டுமிடம்
அத்தனையும் ஆழமடி..

அம்மணியே..
அவ்வளவு ஆழமடி..

ஆழமதில் தான்
போய்வந்து
அசைந்தாடி தான்
கொட்டுதடி

அம்மாடி..
அருவி பேரழகே..

அவ கொட்டி
போகுமிடம் அத்தனையும்
பொன்விளையும்..

பொன்மணியே..
ஆமாம்..
பொன்விளையும்..

அருவியது அந்த மலைகளையே
அறுத்துதான் கொட்டுதடி..
அது கொட்டும் போது
பெரும் சத்தமடி..
அந்த சத்தத்தில இறங்கும்
பித்தமடி..
அந்த சத்தத்தில மத்தளமும்
தோக்குமடி..
அந்த சத்தத்த தான்
மனசது விரும்பிகேட்கும்
நித்தமடி..
இல்லையினா அதுபெரும்
குத்தமடி..

அருவியது போகும்வழி
பச்சைபசும் பசுமையடி..
பசமையில எல்லாமே
ஏகபோகம் தானேடி..
கிளிகளும் குயில்களும்தான்
கொஞ்சி விளையாடுதடி..
மலர்சோலையது சுத்திதான்
படருதடி..
கண்மணியே..

பார்க்க கண்கோடி வேணுமடி
பொன்மணியே..

பாரழகு..
தேரழகு..
அந்த அருவியது
பக்கத்தில
நிக்காது..

அருவியதன் அழகு..
அம்மணியே உன் அழகு..

அத பாத்து
பதபதச்சு நின்னாங்க
எல்லாரும்..

அருவியது உன்உருவில்
காண்கயில..

கற்பனையும்..
கவிதையாக..
கொட்டுதடி அருவியாக..

© CG Kumaran

அவனின் கவிதைகள்..Donde viven las historias. Descúbrelo ahora