மங்கலான மாலை நேரம் வீட்டில் தனக்காக ஓர் உயிர் காத்திருக்கும் என்று ஆண்களும் பெண்களும் தனக்காக தங்கள் பெற்றோர் பதட்டமாக காத்திருப்பர் என்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வாகன நெரிசலையும் பொருட்படுத்தாமல் வண்டிகளிலும் கார்களிலும் பேருந்துகளிலும் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.
அந்த வாகன நெரிசலின் வளைவு நெளிவுகளில் ஓர் கார் அவசரமாக ஊர்ந்து வந்தது. அதில் ஒருவன் முகம் வேர்க்க பதட்டத்துடன் அமர்ந்து காரை முன்னோக்கி செலுத்த வழி கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏசி காரிலும் வேர்க்கும் அளவிற்க்கு அவனை ஏதோ பாதித்திருந்தது. இதயமும் படபடக்க "எதும் ஆக கூடாது .... எதும் ஆக கூடாது" என்று முனுமுனுத்தவாறு காரை ஓட்டினான்.
வாகன நெரிசல்களை தாண்டி காற்றை கிழித்துக் கொண்டு காரில் பறந்தவன் அவன் வந்து சேரும் இடத்தில் காரின் சக்கரங்கள் தேய்ந்து கிழியும் வேகத்தில் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான். அதுவோ ஓர் மருத்துவமணை...
கார் நின்ற அடுத்த நொடி கதவை திறந்து வேகமாக இறங்கியவன் எதிரில் வரும் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே ஓடினான்.
அவன் கால்களின் ஓட்டம் அவன் தாய் நின்றிருந்த அறை முன் தடைப்பட்டது. இவ்வளவு நேரம் பதட்டமாகவும் அவசரமாகவும் ஓடிய கால்கள் அவன் தாயின் வாடிய முகத்தை கண்டு மெதுவாக நடக்க துவங்கியது.
அவன் தாய் அவனை கண்டு அவன் அருகில் வந்தார். "பிரபா சாரு..." என்று அதற்கு மேல் எதும் கூற முடியாமல் முந்தானையால் வாயை பொத்தி அழுதார். பிராவின் கண்களும் கலங்கி விட "டாக்டர் என்ன மா சொன்னாங்க" என்று கலக்கமாக கேட்க
"காப்பாத்த முடியாது சொல்லிட்டாங்க பிரபா" என்று பிரபாவின் தந்தை சோகமாக கூற பிரபா கண்ணில் கண்ணீர் வெளியில் வந்து விழுந்தது. சாருவை அனுமதித்திருந்த அறையில் இருந்து ஒரு செவிலியர் வெளியில் வந்து "பேஷன்டோட பேமிலி யாரு" என்று கேட்க பிரபா முன் சென்று நின்றான்.
YOU ARE READING
கண்மணியின் காதலை தேடி
Romanceகாதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும்...